Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வருவாய் இழப்பை ஈடுகட்ட மாற்று வழிகளை தேடும் வங்கிகள் - காரணம் என்ன?

வருவாய் இழப்பை ஈடுகட்ட மாற்று வழிகளை தேடும் வங்கிகள் - காரணம் என்ன?

2027 ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ஐஆர்டிஏஐ முன்மொழிந்துள்ள சீர்த்திருத்தங்கள் அமலுக்கு வந்தால், ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுகட்ட தனியார் வங்கிகள் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்வதற்காக வங்கிகளுக்கு வழங்கப்படும் கமிஷனைக் குறைப்பது, காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகளை குறைப்பது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, தவறான விற்பனைக்கு அபராதம் உள்ளிட்ட பல்வேறு சீர்த்திருத்தங்களை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) முன்மொழிந்துள்ளது. இது தொடர்பாக நிறுவனங்கள், பொதுமக்கள் கருத்துகளை பகிர்வதற்கான அவகாசம் அக்.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2027 ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒட்டுமொத்தமாக, தனியார் வங்கிகளின் வருவாயில் காப்பீட்டு விநியோகத்தின் பங்கு சராசரியாக அதிகரித்து வரும் நிலையில், 2025–26-ம் நிதியாண்டில் அவற்றின் வரிக்கு முந்தைய லாபத்தில் காப்பீட்டு வருவாயின் பங்கு 7.20 சதவீதமாக இருந்ததாக ஜேஎம் ஃபைனான்ஷியல் மதிப்பிட்டுள்ளது. எனினும், காப்பீட்டு விநியோகத்தின் மூலம் கிடைக்கும் கட்டண வருவாயை வங்கிகள் எந்த அளவுக்கு சார்ந்துள்ளன என்பதைப் பொறுத்து, புதிய விதிமுறைகளால் ஏற்படும் பாதிப்பு வங்கிக்கு வங்கி மாறுபடக் கூடும்.

அந்த வகையில், தனியார் துறை வங்கிகளில், காப்பீட்டு வருவாயை அதிகம் சார்ந்துள்ள வங்கியாக ஆக்சிஸ் வங்கி உள்ளது. 2025–26-ம் நிதியாண்டில், இவ்வங்கியின் வரிக்கு முந்தைய லாபத்தில் காப்பீட்டு வருவாயின் பங்கு 12.50 சதவீதமாக இருந்தது. சராசரி சொத்துகளுடன் ஒப்பிடும்போது இது 18 அடிப்படைப் புள்ளிகளாகும்.
எனவே, விற்பனை அளவை அதிகரிப்பது, தயாரிப்புகளின் விற்பனைக் கலவையை மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் பாதிப்பைக் குறைக்க ஆக்சிஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இதேபோல, ஐஆர்டிஏஐ முன்மொழிந்துள்ள விதிமுறைகள் தற்போதைய வடிவிலேயே அமல்படுத்தப்பட்டால், ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடி காப்பீட்டு விநியோக வருவாய் ஈட்டும் ஆர்பிஎல் வங்கிக்கு குறிப்பிடத்தக்க அளவு இழப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி காப்பீட்டுக் கட்டணங்கள் குறைவதால் வாடிக்கையாளர்களின் பங்கேற்பு அதிகரிக்குமா, விற்பனை அளவு உயருமா, பாலிசிகளைத் தொடர்ந்து புதுப்பிக்கும் விகிதம் மேம்படுமா என்பன உள்ளிட்ட அம்சங்களையும் ஆராய உள்ளது.ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, எஃப்சிஎன்ஆர் வைப்புகளால் கிடைக்கும் நிதிச் செலவு சேமிப்பு, வட்டி விகித உயர்வால் மாறும் வட்டி வருவாயில் ஏற்படக்கூடிய முன்னேற்றம், பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் பாதிப்பைச் சமாளிக்கத் திட்டமிட்டுள்ளது.ஐசிஐசிஐ வங்கியின் மூன்றாம் தரப்பு தயாரிப்புகள் மூலம் கிடைக்கும் வருவாய் 1 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதால், புதிய விதிமுறைகளால் லாபத்தில் ஏற்படும் தாக்கம் குறைவாகவே இருக்கும் என அவ்வங்கி எதிர்பார்க்கிறது.

முந்தைய செய்தி
Talent, R&D key to India's AI ambitions
அடுத்த செய்தி
Franchise model to drive quick-commerce growth in smaller cities

தொடர்புடைய செய்திகள்