Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பொதுப்பங்கு வெளியீட்டுக்குத் தயாராகும் கார்ல்ஸ்பெர்க் இந்தியா

பொதுப்பங்கு வெளியீட்டுக்குத் தயாராகும் கார்ல்ஸ்பெர்க் இந்தியா

முதலீட்டாளர்களின் பார்வைக்காகத் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மதுபான தயாரிப்பு நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் இந்தியா ஆரம்பப் பொதுப்பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) கீழ் 8.64 கோடி பங்குகளை விற்பனை செய்வதற்கான திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை செபியிடம் தாக்கல் செய்துள்ளது.

 
இந்தியாவில் பீர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் மூன்றாவது பெரிய நிறுவனமாகத் திகழும் கார்ல்ஸ்பெர்க் நிறுவனம், உள்நாட்டுப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. 


இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை மாதத்தில் ரகசிய நடைமுறையின் கீழ் விண்ணப்பித்து, கடந்த அக்டோபர் தொடக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம் இருந்து முதற்கட்ட அனுமதியைப் பெற்றிருந்தது. இந்நிறுவனம், தற்போது முதலீட்டாளர்களின் பார்வைக்காகத் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
 
இந்த ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடானது முழுவதுமாக ஏற்கெனவே உள்ள பங்குகளின் விற்பனை முறையில் அமையவுள்ளது. இதில் புதிய பங்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நிறுவனத்தின் தாய் நிறுவனமான டென்மார்க்கை தலைமையகமாகக் கொண்ட கார்ல்ஸ்பெர்க் குரூப் நிறுவனத்துக்குச் சொந்தமான 8 கோடியே 64 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் மட்டுமே பங்குச்சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன. இதன் வாயிலாகச் சந்தையிலிருந்து சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 

முந்தைய செய்தி
Odisha plans air evacuations as Cyclone Arnab maroons 300 Villages
அடுத்த செய்தி
Rajnath Singh cites Operation Sindoor at ADMM-Plus

தொடர்புடைய செய்திகள்