Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிட்டி யூனியன் வங்கியின் Q2 நிகர லாபம் ரூ.416 கோடி

சிட்டி யூனியன் வங்கியின் Q2 நிகர லாபம் ரூ.416 கோடி

நிகர லாபம் ரூ.87 கோடி அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 26 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.416 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.329 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் ரூ.87 கோடி அதிகரித்துள்ளது.


வங்கியின் வட்டி வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.1,653 கோடியாக இருந்த வட்டி வருமானம், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் 27 சதவீதம் அதிகரித்து ரூ.2,092 கோடியாக உள்ளது. இதன் மூலம், வங்கியின் வருவாய் வளர்ச்சியில் வட்டி வருமானம் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது.


அதேநேரத்தில், வங்கியின் வாராக்கடன் நிலையும் மேம்பட்டுள்ளது. மொத்த வாராக்கடனைக் கழித்த பிறகு கணக்கிடப்படும் நிகர வாராக்கடன் விகிதம், கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 0.90 சதவீதமாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் 0.48 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம், நிகர வாராக்கடன் விகிதம் 0.42 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது.


இதனிடையே, மும்பை பங்குச் சந்தையில் சிட்டி யூனியன் வங்கியின் பங்கு புதன்கிழமை வர்த்தக நேரத்தின்போது 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, ரூ.233.70 வரை சென்றது. வர்த்தக நேர முடிவில்ஒரு சதவீதம் உயர்வுடன் ரூ.215-ஆக இருந்தது.

முந்தைய செய்தி
இந்தியாவுடன் வலுவான உறவு - பிரிட்டன் பிரதமர் உறுதி
அடுத்த செய்தி
சட்டவிரோத சிம் பாக்ஸ் நெட்வொர்க்: 2 பேர் கைது

தொடர்புடைய செய்திகள்