Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சபரிமலை சீசன் - கலர் வேட்டி உற்பத்தி மும்முரம்

சபரிமலை சீசன் - கலர் வேட்டி உற்பத்தி மும்முரம்

கலர் வேட்டிகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகை, சபரிமலை சீசனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறிகள் மூலம் கலர் வேட்டி உற்பத்தி தீவிரமாக நடக்கிறது.


ஈரோடு அருகே பள்ளிப்பாளையம் ஜவுளி உற்பத்தி ரகங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு லுங்கி, சட்டைத்துணி, துண்டு, சேலை உள்ளிட்ட பல்வேறு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் கடந்த சில ஆண்டாக கலர் வேட்டிகளின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. மஞ்சள், கருப்பு, காவி, நீலம், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.


இங்கு உற்பத்தி செய்யப்படும் கலர் வேட்டிகள் விற்பனைக்காக ஈரோடு ஜவுளி சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கிருந்து மொத்த வியாபாரிகளால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை நாள் நெருங்கி வரும் நிலையில், கலர் வேட்டிகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, விசைத்தறிகளில் கலர் வேட்டி உற்பத்திப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்க உள்ளதால், அப்போது கலர் வேட்டிகளின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என விசைத்தறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முந்தைய செய்தி
CSB வங்கியின் Q2 நிகர லாபம் 22% உயர்வு
அடுத்த செய்தி
மக்களே ரெடியா? மதுரை-பெங்களூருக்கு கூடுதல் விமானம்

தொடர்புடைய செய்திகள்