Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நவம்பர் 1 முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் ‘டைரக்ட் பிளான்’ இயல்புநிலைத் தேர்வு: செபி அறிவிப்பு!

நவம்பர் 1 முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் ‘டைரக்ட் பிளான்’ இயல்புநிலைத் தேர்வு: செபி அறிவிப்பு!

இரண்டு திட்டங்களின் ஆண்டு செலவு விகிதத்தில் 0.5 சதவீதப் புள்ளி வித்தியாசம் இருந்தால், ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ஓராண்டில் ரூ.2,500 செலவு வேறுபாடு ஏற்படும்.

பகிரவும் WhatsApp Facebook

சொத்து மேலாண்மை நிறுவனங்களின் (AMC) டிஜிட்டல் தளங்களில், வரும் நவம்பர் 1 முதல், டைரக்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இயல்புநிலைத் தேர்வாக இருக்கும் என்று பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே அறிவித்துள்ளார்.

மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், வழக்கமான (ரெகுலர்) முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, அதில் அதிக செலவு விகிதம் இருப்பது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்’ என்றார்.
டைரக்ட் மற்றும் ரெகுலர் திட்டங்கள், ஒரே மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் ஒரே முதலீட்டுத் தொகுப்பைக் கொண்டிருந்தாலும், அவற்றின் செலவு விகிதத்தில் வேறுபாடு உள்ளது. டைரக்ட் திட்டங்களில் இடைத்தரகர்கள் இல்லாததால் செலவு விகிதம் பொதுவாகக் குறைவாக இருக்கும். வழக்கமான திட்டங்களில் விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் செலவுகளும் இடம்பெறும்.

உதாரணமாக, இரண்டு திட்டங்களின் ஆண்டு செலவு விகிதத்தில் 0.5 சதவீதப் புள்ளி வித்தியாசம் இருந்தால், ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ஓராண்டில் ரூ.2,500 செலவு வேறுபாடு ஏற்படும்.
நேரடித் திட்டங்களின் செலவு விகிதம் குறைவாக இருப்பதால், அவை அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என்று கூற முடியாது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை ஆய்வு செய்து, முதலீட்டு அபாயங்களை மதிப்பிட்டு, தங்களது முதலீடுகளைத் தனியாக நிர்வகிக்கக்கூடியவர்கள் நேரடித் திட்டங்களைத் தேர்வு செய்வதன் மூலம் செலவைக் குறைக்கலாம்.

எனினும், முதலீட்டு ஆலோசனை தேவைப்படுவோர் ரெகுலர் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். ஏற்கெனவே உள்ள முதலீட்டை நேரடித் திட்டத்துக்கு மாற்றும்போது மூலதன ஆதாய வரி மற்றும் வெளியேறும் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதால், முதலீட்டாளர்கள் அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முந்தைய செய்தி
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் Q2 நிகர லாபம் 20% அதிகரிப்பு
அடுத்த செய்தி
போட்டி தேர்வுகளில் இளைஞர்களுக்கு உதவும் நூலகங்கள்

தொடர்புடைய செய்திகள்