Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.2,600 கோடி திரட்டும் 5 நிறுவனங்கள் - விவரம் இதோ..

ரூ.2,600 கோடி திரட்டும் 5 நிறுவனங்கள் - விவரம் இதோ..

5 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ.2,600 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

இந்த வாரம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ.2,600 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளன.

நடப்பாண்டில் இதுவரை 104 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாகத் திரட்டியுள்ளன. சமீபத்தில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ரூ.30,213 கோடி மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளது.

ஈஏஏஏ இந்தியா ஆல்டர்நேட்டிவ்ஸ்

எடல்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் குழுமத்தின் ஓர் அங்கமான ஈஏஏஏ இந்தியா ஆல்டர்நேட்டிவ்ஸ் நிறுவனம் ரூ.1,200 கோடி திரட்ட ஐபிஓ வருகிறது. பங்கு கேட்டு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 26ல் தொடங்கி 28ல் நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.1,585 முதல் ரூ.1,665 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலையில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10,765 கோடியாக இருக்கும்.

எஸ்எஃப்சி என்விரன்மென்டல் டெக்னாஜீஸ்

மஹாராஷ்டிராவின் நவிமும்பையை தலைமையிடமாக கொண்டு, கழிவுநீர் சுத்திகரிப்புத் தீர்வுகளை வழங்கும் எஸ்எஃப்சி என்விரன்மென்டல் டெக்னாஜீஸ் ரூ.668 கோடி திரட்ட ஐபிஓ வருகிறது. ஒரு பங்கின் விலை ரூ.313 முதல் ரூ.330 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலையில் நிறுவனத்தின் மதிப்பு ரூ.3,233 கோடியாக இருக்கும்.

எம்கே சன்ஸ் ஃபைன் ஜூவல்ஸ்

மும்பையைச் சேர்ந்த நகை விற்பனை நிறுவனமான எம்கே சன்ஸ் ஃபைன் ஜூவல்ஸ் ரூ.275.4 கோடி திரட்ட ஐபிஓ வருகிறது. பங்கு கேட்டு விண்ணப்பிக்க அவகாசம் அக். 28ல் தொடங்கி, அக்.30ல் நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.153 முதல் ரூ.162 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎல்எஸ் பாலிமர்ஸ்

டெல்லியை தலைமையிடமாக கொண்ட பிஎல்எஸ் பாலிமர்ஸ் நிறுவனத்தின் ரூ.255 கோடி திரட்ட ஐபிஓ வருகிறது. பங்கு கேட்டு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி, 29-ஆம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.142 முதல் ரூ.150 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாம்பே கோட்டடு அண்ட் ஸ்பெஷல் ஸ்டீல்ஸ்

மும்பையை தலைமையிடமாக கொண்ட பாம்பே கோட்டடு அண்ட் ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் நிறுவனம், ரூ.183.1 கோடி திரட்ட ஐபிஓ வருகிறது. பங்கு கேட்டு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 29ல் தொடங்கி, நவம்பர் 2ம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.78 முதல் ரூ.82 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Rising global demand, lower price to boost rice exports: IREF
அடுத்த செய்தி
விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அவசியமா? : சீமான்

தொடர்புடைய செய்திகள்