Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எச்டி ஃபயர் உற்பத்தி நிறுவன பங்குகள் 24% உயர்வுடன் பட்டியல்

எச்டி ஃபயர் உற்பத்தி நிறுவன பங்குகள் 24% உயர்வுடன் பட்டியல்

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ), 23.39 சதவீத உயர்வுடன் ரூ.334.40-க்கு பட்டியலான பங்கு, பின்னர் 8.88 சதவீதம் குறைந்து ரூ.304.70-க்கு வர்த்தகமானது.

பகிரவும் WhatsApp Facebook

தீயணைப்புப் பாதுகாப்புச் சாதனங்களைத் தயாரிக்கும் எச்டி ஃபயர் உற்பத்தி நிறுவனப் பங்குகள், வெளியீட்டு விலையைவிட சுமார் 24 சதவீத உயர்வுடன் நேற்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. எனினும், பின்னர் அவற்றின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ), ரூ.271 வெளியீட்டு விலை கொண்ட இப்பங்கு, 23.62 சதவீத உயர்வுடன் ரூ.335-க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது. பின்னர் பட்டியலான விலையிலிருந்து 8.43 சதவீதம் சரிந்து ரூ.306.75-க்கு வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ), 23.39 சதவீத உயர்வுடன் ரூ.334.40-க்கு பட்டியலான பங்கு, பின்னர் 8.88 சதவீதம் குறைந்து ரூ.304.70-க்கு வர்த்தகமானது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரு சந்தைகளிலும் சுமார் ரூ.5,280 கோடியாக இருந்தது.

ரூ.712 கோடி மதிப்பிலான இந்நிறுவனத்தின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ), விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளில் 131.70 மடங்கு சந்தா கிடைத்தது. பங்கு ஒன்றின் விலை வரம்பு ரூ.258–271 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வெளியீடு முழுவதும் நிறுவனத்தின் முன்னோடிகள் வைத்திருந்த 2.63 கோடி பங்குகளை விற்பனை செய்வதாக அமைந்திருந்தது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், நீர், நுரை மற்றும் வாயு அடிப்படையிலான தீயணைப்புச் சாதனங்களையும் அமைப்புகளையும் வடிவமைத்துத் தயாரிக்கிறது. மகாராஷ்டிரத்தில் இரண்டு உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. எண்ணெய், எரிவாயு, மின்சாரம், மருந்து, விண்வெளி, தரவு மையங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு இந்நிறுவனம் சேவையளிக்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடம், ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்துக்கும் சாதனங்களை வழங்கியுள்ளது.

முந்தைய செய்தி
சாய்ஸ் மியூச்சுவல் ஃபண்டின் புதிய பங்கு திட்டம்
அடுத்த செய்தி
Steps taken to expedite distribution of 20 lakh pattas: Minister Sengottaiyan

தொடர்புடைய செய்திகள்