Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஹூண்டாய் இந்தியா லாபம் 24% சரிவு

ஹூண்டாய் இந்தியா லாபம் 24% சரிவு
புதுடெல்லி ஏரோசிட்டியில் நடைபெற்ற ஹூண்டாய் பேயான் கார் அறிமுக விழாவில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தருண் கர்க் (இடது).

மொத்த செலவுகள் ரூ.15,566.06 கோடியிலிருந்து ரூ.19,302.18 கோடியாக அதிகரித்தன.

பகிரவும் WhatsApp Facebook

மூலப்பொருள் செலவுகள் அதிகரித்ததால், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் சுமார் 24 சதவீதம் குறைந்து, ரூ.1,196.16 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.1,572.25 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. செயல்பாட்டு வருவாய் ரூ.17,460.82 கோடியிலிருந்து ரூ.20,696.05 கோடியாக உயர்ந்தது. மொத்த செலவுகள் ரூ.15,566.06 கோடியிலிருந்து ரூ.19,302.18 கோடியாக அதிகரித்தன.


இந்தக் காலாண்டில் இதுவரை இல்லாத அளவாக 2,19,072 வாகனங்கள் விற்பனையாகின. இது ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதமும், முந்தைய காலாண்டைவிட 23 சதவீதமும் அதிகம்.
காலாண்டு வருவாய் முதல்முறையாக ரூ.20,000 கோடியைக் கடந்தபோதிலும், உயர்ந்த மூலப்பொருள் விலைகள் லாபத்தை பாதித்ததாக நிறுவன நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான தருண் கர்க் தெரிவித்தார்.


பேயான் அறிமுகத்துடன் புதிய தயாரிப்புகளின் வருகை தொடங்குவதாகவும், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வெகுஜன சந்தைக்கான பிரத்யேக மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்படும். நிதியாண்டின் இரண்டாம் பாதியில் நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

முக்கிய நிதி விவரங்கள்


காலம்: ஜூலை – செப்டம்பர் 2026 (Q2 FY2026–27)
நிதி அளவுகோல்                                             கடந்த ஆண்டு          இதே காலாண்டு             நடப்பு காலாண்டு                   மாற்றம்
ஒருங்கிணைந்த நிகர லாபம்                        ₹1,572.25 கோடி            ₹1,196.16 கோடி                         23.9%                                   சரிவு
செயல்பாட்டு வருவாய்                                   ₹17,460.82 கோடி         ₹20,696.06 கோடி                  சுமார் 18.5%                          உயர்வு
மொத்த செலவுகள்                                           ₹15,566.07 கோடி          ₹19,302.18 கோடி                   சுமார் 24%                           உயர்வு
மூலப்பொருள் பயன்பாட்டுச் செலவு          ₹12,183.17 கோடி          ₹15,730.91 கோடி                   சுமார் 29%                           உயர்வு
மொத்த வருமானம்                                           ₹17,692.03 கோடி          ₹20,920.02 கோடி                                                                  உயர்வு

முந்தைய செய்தி
Anthropic uses Claude to generate 35,000 antibody designs
அடுத்த செய்தி
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% ஆக உயர்வு

தொடர்புடைய செய்திகள்