Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

IDFC FIRST வங்கி லாபம் 196.5% உயர்வு

IDFC FIRST வங்கி லாபம் 196.5% உயர்வு

மொத்த வைப்புத்தொகை ஆண்டுக்கு 25.9% வளர்ந்து ரூ.3,48,583 கோடியானது.

பகிரவும் WhatsApp Facebook

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 2026–27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு வரிக்குப் பிந்தைய நிகர லாபம், முந்தைய ஆண்டின் இதே காலாண்டைவிட 196.5% அதிகரித்து ரூ.1,045 கோடியாக உயர்ந்துள்ளது.

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை வங்கி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக நிகர லாபம் ரூ.1,000 கோடியைக் கடந்துள்ளது. முதல் அரையாண்டில் நிகர லாபம் ரூ.2,120 கோடியாக பதிவானது. மொத்த வைப்புத்தொகை ஆண்டுக்கு 25.9% வளர்ந்து ரூ.3,48,583 கோடியானது.


 கடன்கள் மற்றும் முன்பணங்கள் 30.1% அதிகரித்து ரூ.3,46,913 கோடியை எட்டின. வர்த்தக ஆதாயங்கள் நீங்கலான அடிப்படை செயல்பாட்டு லாபம் 38.5% உயர்ந்து ரூ.2,527 கோடியாக இருந்தது. செலவினக் கட்டுப்பாட்டால் வருமானத்துடன் ஒப்பிடும் செலவு விகிதமும் மேம்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொத்த வாராக்கடன் விகிதம் 1.32% ஆகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.40% ஆகவும் இருந்தன. சராசரி நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புகளின் விகிதம் 48.4% ஆகப் பதிவானது.


இரண்டாம் காலாண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புகளாக ரூ.34,390 கோடி திரட்டப்பட்டது. இவை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான பணப்புழக்க ஆதாரத்தை வழங்கும் என வங்கி தெரிவித்துள்ளது. எஸ் அண்ட் பி நிறுவனம், வங்கிக்கு ‘BBB-’ முதலீட்டுத் தர மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

முந்தைய செய்தி
சென்செக்ஸ் 483 புள்ளிகள் உயர்வு
அடுத்த செய்தி
ஏஐ கட்டமைப்பில் ரூ.4,350 கோடி முதலீடு

தொடர்புடைய செய்திகள்