Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விதிமுறைகளை மீறிய 467 தொழிற்சாலைகள் மூடல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

விதிமுறைகளை மீறிய 467 தொழிற்சாலைகள் மூடல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

கடந்த ஐந்து மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டதாக 467 தொழிற்சாலைகளை மூடி, அவற்றின் மின் இணைப்பைத் துண்டித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் கடந்த 5 மாதங்களாக நடத்தப்பட்ட தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளில், தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து விதிகளை மீறியதாக மொத்தம் 467 தொழிற்சாலைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன், அந்தத் தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளும் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டப்பூர்வ நிபந்தனைகளை மீறியது, அரசு நிர்ணயித்த புகை மற்றும் கழிவுநீர் வெளியேற்றத் தரநிலைகளைப் பின்பற்றத் தவறியது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான இசைவாணை பெறாமல் தொழிற்சாலையை இயக்கியது, சுத்திகரிக்கப்படாத அபாயகரமான கழிவுநீரை நீர்நிலைகளில் நேரடியாக வெளியேற்றியது ஆகிய காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
டிக்சன், சிர்மா வருவாய் அதிகரிப்பு
அடுத்த செய்தி
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு உயர்வு

தொடர்புடைய செய்திகள்