Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தோஸ்டார் கேப்பிட்டல் கடன் வழங்கல் 51% உயர்வு

இந்தோஸ்டார் கேப்பிட்டல் கடன் வழங்கல் 51% உயர்வு

நிகர வட்டி வருமானம் 27 சதவீதம் அதிகரித்து ரூ.242.3 கோடியை எட்டியது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தோஸ்டார் கேப்பிட்டல் பைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.1,399 கோடி கடன் வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 51 சதவீதம் அதிகமாகும்.

செப்டம்பர் இறுதியில் நிறுவனத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்துகள் 12 சதவீதம் உயர்ந்து ரூ.8,459 கோடியாக இருந்தன. நிகர வட்டி வருமானம் 27 சதவீதம் அதிகரித்து ரூ.242.3 கோடியை எட்டியது.


வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.10.5 கோடியிலிருந்து ரூ.13.1 கோடியாக உயர்ந்தது. ஒதுக்கீடுகளுக்கு முந்தைய செயல்பாட்டு லாபம் 58 சதவீதம் அதிகரித்து ரூ.109.2 கோடியானது.
நிறுவனம் இக்காலாண்டில் ஏழு கிளைகளைத் திறந்துள்ளது. 

இதன்மூலம் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதன் கிளைகளின் எண்ணிக்கை 475 ஆக உயர்ந்துள்ளது. வாகனக் கடன் மற்றும் சொத்து அடமான சிறுகடன் வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

முந்தைய செய்தி
AI robotics may need 10 million hours of data for production readiness
அடுத்த செய்தி
ரூ.160க்கு விற்பனையாகும் சின்ன வெங்காயம்: பொதுமக்கள் கவலை

தொடர்புடைய செய்திகள்