Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

JSW ஸ்டீல் உற்பத்தி 5% உயர்வு

JSW ஸ்டீல் உற்பத்தி 5% உயர்வு

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 5 சதவீதம் அதிகரித்து 72.7 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கச்சா எஃகு உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 5 சதவீதம் அதிகரித்து 72.7 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. 

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் உற்பத்தி 69.5 லட்சம் டன்னாக இருந்தது. இந்திய ஆலைகளின் உற்பத்தியும் 5 சதவீதம் உயர்ந்து 70.7 லட்சம் டன்னை எட்டியுள்ளதாக பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்திய ஆலைகளின் உற்பத்தித் திறன் பயன்பாடு 88 சதவீதமாக இருந்தது. விஜயநகர் ஆலையில் மேம்படுத்தப்பட்ட மூன்றாவது ஊது உலையின் உற்பத்தி அதிகரித்ததால், செப்டம்பரில் இது சுமார் 90 சதவீதத்தை எட்டியது.


நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஒருங்கிணைந்த உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்து 138.6 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 133.2 லட்சம் டன்னாக இருந்தது.

முந்தைய செய்தி
அதானி கிரீன் எனர்ஜி 7.53% வீழ்ச்சி
அடுத்த செய்தி
பயனாளிகளுக்கு நேரடியாக ரூ.50 லட்சம் கோடி - மோடி தகவல்

தொடர்புடைய செய்திகள்