Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தொடர்ந்து 8 வாரங்கள் வீழ்ந்த நிஃப்டி

தொடர்ந்து 8 வாரங்கள் வீழ்ந்த நிஃப்டி

நிஃப்டி தொடர்ந்து 8-வது வாரமாக நேற்று சரிவை சந்தித்தது. 25 ஆண்டுகளில் இல்லாத நீண்ட தொடர் வீழ்ச்சியை நிஃப்டி பதிவு செய்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மும்பை:

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை, கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க பத்திர வருவாய் உயர்வு காரணமாக நிஃப்டி தொடர்ந்து 8-வது வாரமாக நேற்று சரிவை சந்தித்தது. 25 ஆண்டுகளில் இல்லாத நீண்ட தொடர் வீழ்ச்சியை நிஃப்டி பதிவு செய்துள்ளது.
இந்திய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு தொடர்ந்து 8-வது வாரமாக சரிவில் முடிந்துள்ளது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு நிஃப்டி இவ்வளவு நீண்ட காலம் தொடர்ந்து வாராந்திர சரிவை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். நேற்று (அக்.1) நிஃப்டி 198.50 புள்ளிகள் சரிந்து 22,421.95-ல் முடிந்தது. செப்.25-ல் 23,140.50-ல் இருந்த நிஃப்டி, இந்த வாரத்தில் மட்டும் 718.55 புள்ளிகள் (சுமார் 3.1 சதவீதம்) வீழ்ந்துள்ளது. கடந்த 8 வாரங்களில் நிஃப்டி மொத்தம் 2,149 புள்ளிகள் (8.7 சதவீதம்) சரிந்துள்ளது.
இன்று (அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பங்குச் சந்தைக்கு (என்எஸ்இ) விடுமுறை என்பதால், வியாழக்கிழமையே இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளாக அமைந்தது. எனவே, 8-வது வார சரிவு நேற்றே உறுதியானது.
கடந்த 2020 கரோனா காலத்தில் நிஃப்டி தொடர்ந்து 7 வாரங்கள் சரிந்திருந்தது. தற்போதைய 8 வார சரிவு அந்த காலகட்டத்தை மிஞ்சியுள்ளது. அதேநேரம், இது நிஃப்டியின் அனைத்து கால நீண்ட சரிவு அல்ல. 2001-ல் தொடர்ந்து 9 வாரங்கள் சரிந்ததே நீண்ட தொடர் வீழ்ச்சியாகும். 1993-லும் 8 வார சரிவு பதிவாகியிருந்ததாக எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் தரவு தெரிவிக்கிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம் தற்போதைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. 2026-ல் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து சுமார் 27.8 பில்லியன் டாலரை வெளியே எடுத்துள்ளனர். இதனுடன் அமெரிக்க 10 ஆண்டு பத்திர வருவாய் 5.34 சதவீதம் வரை உயர்ந்ததும் முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக வைத்துள்ளது.
மேலும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை கடந்தது, ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 96-க்கு மேல் பலவீனமடைந்தது. ஆகியவையும் சந்தைக்கு அழுத்தமாக அமைந்தன. கச்சா எண்ணெய் விலை, உலகளாவிய பத்திர வருவாய் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வெளியேற்றம் குறையாத வரை சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரலாம் என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
முந்தைய செய்தி
உணவகங்களுக்கு ஷாக்! இன்று முதல் ரூ.3 ஆயிரத்தை நெருங்கும் வணிக சிலிண்டர் விலை!
அடுத்த செய்தி
குப்பையை தரம் பிரிக்காத வணிக நிறுவனங்கள்! 40 நாட்களில் ரூ.6.60 லட்சம் அபராதம் வசூல்!

தொடர்புடைய செய்திகள்