Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நிஃப்டி ஏற்றம் தொடர்ந்து நீடிக்குமா! ஆய்வாளர்கள் கருத்து என்ன?

நிஃப்டி ஏற்றம் தொடர்ந்து நீடிக்குமா! ஆய்வாளர்கள் கருத்து என்ன?

சந்தையின் ஒட்டுமொத்தப் போக்கு பலவீனமாகவே நீடிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

மும்பை:

முந்தைய வர்த்தகத்தின் கடும் சரிவுக்குப் பிறகு, நேற்று நிஃப்டி 133 புள்ளிகள் (0.60 சதவீதம்) உயர்ந்தது. எனினும், 22,600 புள்ளிகள் அருகே விற்பனை அழுத்தம் ஏற்பட்டதால் ஏற்றம் கட்டுப்பட்டது.


இன்று (அக். 6) வாராந்திர காலாவதி நாள் வர்த்தகத்தில், இந்த மீட்சியை விற்பனைக்கான வாய்ப்பாக முதலீட்டாளர்கள் பயன்படுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடர்ந்து வாங்கும் போக்கு உருவானால்தான் நிலையான மீட்சி சாத்தியமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் சுதீப் ஷா, 22,400–22,380 புள்ளிகளை உடனடி ஆதரவாகக் குறிப்பிடுகிறார். இதற்குக் கீழே சென்றால் 22,220 வரை சரியலாம். 22,700–22,720 தடையைத் தாண்டினால் 22,850 வரை முன்னேறலாம் என்கிறார்.


எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் நாகராஜ் ஷெட்டி, 22,800 புள்ளிகளில் வலுவான எதிர்ப்பு இருப்பதாகக் கூறுகிறார். ஏஞ்சல் ஒன் ஆய்வாளர் ஹிதேஷ் ரதி, 22,850–23,000 பகுதியை முக்கிய எதிர்ப்பாகக் கருதுகிறார். தொடர்ச்சியான வாங்குதல் உருவாகும்வரை சந்தையின் ஒட்டுமொத்தப் போக்கு பலவீனமாகவே நீடிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முந்தைய செய்தி
எம்.ஜி.ஆர் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்த தவெக அரசு! நெகிழ்ச்சியில் ஜவுளித்துறை
அடுத்த செய்தி
ஸ்டெர்லைட் டெக் பங்கு மேலும் உயர வாய்ப்பு - ரூ.1 கோடி லாபம்

தொடர்புடைய செய்திகள்