Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்செக்ஸ் 685 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 685 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள 30 நிறுவனங்களில் டிரென்ட் பங்கு அதிகபட்சமாக 12.78 சதவீதம் உயர்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

கச்சா எண்ணெய் விலை குறைவு, வங்கிப் பங்குகளில் முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் உயர்வும் சந்தைக்கு ஆதரவாக அமைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 685.34 புள்ளிகள் (0.95 சதவீதம்) உயர்ந்து 73,067.81 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 220.35 புள்ளிகள் ( 0.98 சதவீதம்) அதிகரித்து 22,776.10 புள்ளிகளில் நிறைவடைந்தது.


சென்செக்ஸ் பட்டியலிலுள்ள 30 நிறுவனங்களில் டிரென்ட் பங்கு அதிகபட்சமாக 12.78 சதவீதம் உயர்ந்தது. கோட்டக் மஹிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டர்குளோப் ஏவியேஷன், எட்டர்னல் மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகளும் ஏற்றம் கண்டன.
டெக் மஹிந்திரா, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஐடிசி பங்குகள் சரிவடைந்தன. சர்வதேச எண்ணெய் அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.70 சதவீதம் குறைந்து, பீப்பாய்க்கு 98.59 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்ததால், சந்தை மனநிலையைப் பாதித்துவந்த பொருளாதார அழுத்தங்கள் ஓரளவு தணிந்ததாக என்ரிச் மணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பொன்முடி தெரிவித்தார். இதனால் குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்ததாகக் கூறினார்.
ஜி7 நாடுகளின் பெரிய அளவிலான எண்ணெய் கையிருப்பு வெளியீடும், குழாய்கள் வழியான மாற்று விநியோகமும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்ட உதவியதாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர் தெரிவித்தார்.


நிதி, சில்லறை வர்த்தக நிறுவனங்களின் வலுவான இரண்டாம் காலாண்டு வணிகத் தகவல்கள் மற்றும் சாதகமான உலகச் சந்தை நிலவரமும் முதலீட்டாளர் நம்பிக்கையை மேம்படுத்தியதாக அவர் கூறினார். அதிக விற்பனைக்குள்ளான நிலையிலிருந்து சந்தை மீண்டதாகவும் தெரிவித்தார்.
பிஎஸ்இ ஸ்மால்கேப் செலக்ட் குறியீடு 1.25 சதவீதமும், மிட்கேப் செலக்ட் குறியீடு 1 சதவீதமும் உயர்ந்தன. தொலைத்தொடர்பு 2.33%, மூலதனப் பொருட்கள் 1.79%, தொழில்துறை 1.62%, எஃப்எம்சிஜி 1.57%, மின்சாரம், எண்ணெய்–எரிவாயு தலா 1.21%, காப்பீடு 1.06% உயர்ந்தன.


ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், பொதுத்துறை வங்கி, மருத்துவமனை உள்ளிட்ட குறியீடுகள் சரிந்தன. ஆசியாவில் ஜப்பானின் நிக்கேய் 225, ஹாங்காங்கின் ஹாங் செங் உயர்ந்தன. தென்கொரியாவின் கோஸ்பி சரிவுடன் நிறைவடைந்தது. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
அமெரிக்க பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன. இதனிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.4,699.14 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியதாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விற்பனைக்கு மத்தியிலும் இந்திய சந்தைகள் உயர்ந்தன.

முந்தைய செய்தி
எல் அண்ட் டி நிறுவனத்துக்கு பிரம்மாண்ட ஒப்பந்தங்கள்
அடுத்த செய்தி
Jaishankar meets Ghana’s FM to boost strategic ties

தொடர்புடைய செய்திகள்