Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆர்பிஎல் வங்கி லாபம் இரு மடங்குக்கு மேல் உயர்வு

ஆர்பிஎல் வங்கி லாபம் இரு மடங்குக்கு மேல் உயர்வு

காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் இரு மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.498.36 கோடியானது.

பகிரவும் WhatsApp Facebook

ஆர்பிஎல் வங்கியின் ஜூலை–செப்டம்பர் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் இரு மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.498.36 கோடியானது. ரிசர்வ் வங்கியின் எஃப்சிஎன்ஆர்(பி) திட்டம் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த திட்டத்தின்கீழ் வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து 340 கோடி அமெரிக்க டாலர் வைப்புகளை வங்கி திரட்டியது. இந்த நிதியால் மொத்த வைப்புகளின் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தியதுடன், திட்டத்தின் கடன் வசதியின்கீழ் வைப்புதாரர்களுக்கு ரூ.10,300 கோடி கடன் வழங்கியது.


மொத்தக் கடன் வளர்ச்சி 42 சதவீதமாகவும், திட்டம் நீங்கலான வளர்ச்சி 30 சதவீதமாகவும் இருந்ததாக நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியகுமார் தெரிவித்தார்.
நிகர வட்டி வருமானம் 37 சதவீதம் உயர்ந்து ரூ.2,131 கோடியாகவும், பிற வருமானம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.1,077 கோடியாகவும் இருந்தது. 

நிகர வட்டி விளிம்பு 4.61 சதவீதமாக உயர்ந்தது. மொத்த வராக்கடன் விகிதம் 1.02 சதவீதமாகக் குறைந்தது. ஒதுக்கீடுகள் 53 சதவீதம் அதிகரித்து ரூ.766.5 கோடியானது. மூலதனப் போதுமான விகிதம் 30.1 சதவீதமாக இருந்தது.


மத்திய கிழக்கு வர்த்தகம், பெருநிறுவனக் கடன்கள், செல்வ மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வங்கி திட்டமிட்டுள்ளது. திரட்டிய வைப்புகளை முழுமையாகப் பயன்படுத்த இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
சில்லறை பணவீக்கம் 5.54%-ஆக அதிகரிப்பு
அடுத்த செய்தி
சுனில் பார்தி மிட்டலுக்கு பிரான்ஸ் நாட்டின் விருது

தொடர்புடைய செய்திகள்