Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரிஷப் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், மகாராஷ்டிரா வங்கி பங்குகளை ‘வாங்கலாம்’

ரிஷப் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், மகாராஷ்டிரா வங்கி பங்குகளை ‘வாங்கலாம்’

ரிஷப் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், மகாராஷ்டிரா வங்கி பங்குகள் ‘வாங்கலாம்’ என பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ரிஷப் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனப் பங்கு 33.4 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக சாய்ஸ் ஈக்விட்டி புரோக்கிங் நிறுவனம் கணித்துள்ளது. இப்பங்கின் தற்போதைய சந்தை விலை ரூ.622 ஆக உள்ள நிலையில், இலக்கு விலை ரூ.830 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்கை வாங்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.

மின்சார உபகரணங்கள், தொழில்துறை தானியங்கிமயமாக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் அதிகரிக்கும் தேவை வளர்ச்சிக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2026 முதல் 2029 நிதியாண்டு வரையிலான காலத்தில் நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 16 சதவீதமும், நிகர லாபம் 24 சதவீதமும் வளரக்கூடும் என நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை முக்கிய அபாயமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா வங்கியின் பங்கு விலை ரூ.96 வரை உயர வாய்ப்புள்ளதாக சாய்ஸ் ஈக்விட்டி புரோக்கிங் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 

இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, மகாராஷ்டிரா வங்கிப் பங்கு தொடர்ந்து ஏற்றப் போக்கில் உள்ளது. வாராந்திர வர்த்தக வரைபடத்தில் பங்கின் விலை உயர்வதற்கான சாதகமான அறிகுறிகள் தென்படுகின்றன.
மேலும், பங்கின் விலை 20 வார சராசரி நகர்வுக் கோட்டுக்கு அருகில் ஆதரவு பெறுகிறது. ஆர்எஸ்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருப்பது, பங்கில் வாங்கும் ஆர்வம் நீடிப்பதைக் காட்டுகிறது.


இதனால், ரூ.82.75 என்ற விலையில் இப்பங்கை வாங்கலாம். விலை ரூ.80 வரை குறைந்தால் கூடுதலாக வாங்கலாம். பங்கின் இலக்கு விலையாக முதலில் ரூ.91, அடுத்ததாக ரூ.96 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.76 முக்கிய ஆதரவு நிலையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைக்கு மேல் பங்கு நீடிப்பது அவசியம் என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
Meesho, Nazara வருவாய் உயரும் என கணிப்பு
அடுத்த செய்தி
சென்செக்ஸ் 879 புள்ளிகள் உயர்வு - ஐடி பங்குகளில் ஆர்வம்

தொடர்புடைய செய்திகள்