Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பங்குச் சந்தையில் AI மூலம் கண்காணிப்பு தீவிரம்: புதிய சீர்திருத்தங்களை அறிவித்த செபி!

பங்குச் சந்தையில் AI மூலம் கண்காணிப்பு தீவிரம்: புதிய சீர்திருத்தங்களை அறிவித்த செபி!

ஆபத்துகளைத் தவிர்க்க உடனடி வர்த்தக நிறுத்தக் கட்டுப்பாடுகள்மற்றும் மனிதக் கண்காணிப்புடன் கூடிய பொறுப்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

பங்குச் சந்தையில் ஏஐ பரிசோதனை மற்றும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.

மும்பையில் தேசிய பங்குச் சந்தை உறுப்பினர்கள் சங்கத்தின் 16-வது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் செபி தலைவர் துஹின் காந்த பாண்டே பேசியதாவது: பங்குத் தரகர்களின் வணிக அளவு மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு ஏற்ப விதிமுறைகளை எளிதாக்கும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் நிறுவனங்களின் மூலதனத் திறன் அதிகரிக்கும். அதேபோல, நிதிச் சந்தைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஏஐ சோதனை களம் உருவாக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்களின் பணத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல், புதிய ஏஐ தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்க்கவே இந்த பிரத்யேகப் பரிசோதனைக் களம் அமைகிறது.

ஆபத்துகளைத் தவிர்க்க உடனடி வர்த்தக நிறுத்தக் கட்டுப்பாடுகள்மற்றும் மனிதக் கண்காணிப்புடன் கூடிய பொறுப்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்.  மேலும், கார்ப்பரேட் பத்திரங்களுக்கான இரண்டாம் நிலை சந்தை வர்த்தகத்தை ஊக்குவிக்க புதிய கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.

இதன் மூலம் பத்திரச் சந்தையில் பணப்புழக்கம் அதிகரிப்பதுடன், பரிவர்த்தனை அபாயங்கள் குறையும். போர்ட்ஃபோலியோ மேலாண்மை மற்றும் மாற்று முதலீட்டு நிதிகள் போன்ற நிறுவன வாடிக்கையாளர்களுக்குத் தானியங்கி வர்த்தக வசதிகள் பணப் பிரிவிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிவேகமாக வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு, முதலீட்டாளர்களின் பாதுகாப்பையும், சந்தையின் நம்பகத்தன்மையையும் உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
Priti Adani pushes for industry-aligned education to boost semicon ambitions
அடுத்த செய்தி
Farm-level pesticide control, traceability key to reducing rice export rejections

தொடர்புடைய செய்திகள்