Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.31,000 கோடியை கடந்தது எஸ்ஐஎஃப் சொத்து

ரூ.31,000 கோடியை கடந்தது எஸ்ஐஎஃப் சொத்து

எஸ்ஐஎஃப் திட்டங்களில் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு ரூ.31,175 கோடியாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மும்பை:

இந்தியாவில் ஸ்பெஷலைஸ்டு இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் (எஸ்ஐஎஃப்) திட்டங்களில் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு ரூ.31,175 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது 17 சொத்து மேலாண்மை நிறுவனங்களின் கீழ் 33 எஸ்ஐஎப் திட்டங்கள் செயல்படுகின்றன.
இதில் முன்னணி 3 நிறுவனங்கள் மட்டும் மொத்த சந்தையில் 68.5 சதவீத பங்கை வைத்துள்ளன. இவற்றின் மொத்த சொத்து மதிப்பு ரூ.21,334 கோடியாக உள்ளது.
எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டின் ‘அல்டிவா’ ரூ.10,785 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஐசிஐசிஐ புரூடென்ஷியலின் ‘ஐஎஸ்ஐஎப்’ ரூ.5,430 கோடியுடன் அடுத்த இடத்தில் உள்ளது.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் ‘மேக்னம்’ ரூ.5,119 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. புதிய முதலீட்டாளர்கள், நன்கு அறிமுகமான பெரிய நிறுவனங்களை அதிகம் தேர்வு செய்வதே இந்த சந்தை குவிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
எஸ்ஐஎப் திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு ரூ.10 லட்சமாக உள்ளது. ஜனவரியில் ரூ.4,928 கோடியாக இருந்த இத்துறையின் சொத்து மதிப்பு, ஆகஸ்டில் ரூ.31,175 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 8 மாதங்களில் 528 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

முந்தைய செய்தி
குப்பையை தரம் பிரிக்காத வணிக நிறுவனங்கள்! 40 நாட்களில் ரூ.6.60 லட்சம் அபராதம் வசூல்!
அடுத்த செய்தி
காலாண்டில் 1 லட்சத்தைக் கடந்த வீடுகள் விற்பனை

தொடர்புடைய செய்திகள்