Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்தின் Q2 நிகர லாபம் 19% வளர்ச்சி

டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்தின் Q2 நிகர லாபம் 19% வளர்ச்சி

வரிகளுக்குப் பிந்தைய லாபமாக (PAT) ரூ.243 கோடியைப் பதிவு செய்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

டிவிஎஸ் வேணு (TVS VENU) குழுமத்தின் ஓர் அங்கமும், இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றுமான டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தனது நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுடன் (Q2) ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் கடன்கள் வழங்குவதில் 31 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது. மொத்த வருவாய் ரூ.2,029 கோடி. இது கடந்த ஆண்டைவிட 14 சதவீத வளர்ச்சியாகும். வரிகளுக்குப் பிந்தைய லாபமாக (PAT) ரூ.243 கோடியைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 19 சதவீத வளர்ச்சியாகும்.


முதல் அரையாண்டில் நிர்வகிக்கப்படும் சொத்துகள் ரூ.33,818 கோடியாக உயர்ந்து, 22 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மொத்த வருவாயில் 14 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.3,948 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் 17 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.452 கோடியாக உயர்ந்துள்ளது.


சில்லறை நிதியளிப்புப் பிரிவுகளில் தொடர்ச்சியான தேவை இருந்ததால், கடன் வழங்குவதில் நல்ல வளர்ச்சி காணப்பட்டது. நகர்ப்புறம் சார்ந்த கிராமப்புறங்கள் மற்றும் கிராமப்புற சந்தைகளில் வலுவான தேவையும், மின்சார வாகனங்களின் (EV) அதிகப்படியான பயன்பாடும் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. காலாண்டில் மட்டும் 14 லட்சத்துக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களுக்குக் கடன்களை வழங்கி, தனது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை 2.7 கோடிக்கும் அதிகமாக உயர்த்தி உள்ளது.


நாடு முழுவதும் 65,100 இடங்களில் அலுவலகம் நடத்தி வரும் இந்நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள், செல்போன்கள் வாங்க கடன் வழங்குவதுடன், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மறு விற்பனைக்கும் ஜாமீன் இல்லாத கடன்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
அத்தியாவசியப் பொருட்கள் இருப்புக்கு வரம்பு: மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
அடுத்த செய்தி
HUL bets on rural recovery, premiumisation in strong Q2 performance

தொடர்புடைய செய்திகள்