Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தடையின்றி வரும் கச்சா எண்ணெய் - என்ன காரணம் தெரியுமா?

தடையின்றி வரும் கச்சா எண்ணெய் - என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு 52.6 லட்சம் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

புதுடெல்லி:

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செப்டம்பர் மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு 52.6 லட்சம் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது.


ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார் ஆகிய வளைகுடா நாடுகள் இணைந்து இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 39 சதவீதத்தை வழங்கியுள்ளன. ஈராக்கில் இருந்து நாளொன்றுக்கு 5.25 லட்சம் பீப்பாய்களும், சவுதி அரேபியாவில் இருந்து 5.17 லட்சம் பீப்பாய்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 4.38 லட்சம் பீப்பாய்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. குவைத்தின் விநியோகம் 3.35 லட்சம் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு வருவதில் உள்ள ஆபத்தை சமாளிக்க, எண்ணெய் உற்பத்தி நாடுகளும் வர்த்தக நிறுவனங்களும் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றும் நடைமுறை அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை கடந்து வரும் பெரிய எண்ணெய் கப்பல்கள், ஓமன் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அருகிலுள்ள கடற்பகுதிகளில் மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றுகின்றன. பின்னர் அந்தக் கப்பல்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெயைக் கொண்டு செல்கின்றன.


இதற்கிடையே, இந்தியாவின் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ரஷியாவிலிருந்து இந்தியா வாங்கிய எண்ணெயின் அளவு நாளொன்றுக்கு சுமார் 17 முதல் 19 லட்சம் பீப்பாய்கள் என்ற அளவில் இருந்தது.
சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழியாகவும் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து செங்கடல் பகுதியில் உள்ள யான்பு துறைமுகத்துக்கு எண்ணெயை கொண்டு செல்ல முடியும். இதனால் கடல் வழி விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளை குறைக்க முடியும்.


இந்தியாவின் பல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதால், வளைகுடா நாடுகளிலிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது இந்தியாவின் எரிபொருள் தேவையை சமாளிக்க உதவும்.

முந்தைய செய்தி
IEA says 325 million oil barrels released out of 400 originally pledged
அடுத்த செய்தி
மின் கட்டணம், மளிகைக்கடை பில்லை பாருங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தொடர்புடைய செய்திகள்