Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

VFRYT தளத்தில் 50 மின்சார வாகனங்கள்

VFRYT தளத்தில் 50 மின்சார வாகனங்கள்

மான்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனம், விஎஃப்ஆர்ஒய்டி (VFRYT) நிறுவனத்துடன் இணைந்து 50 மின்சார சரக்கு வாகனங்களை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், மான்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனம், விஎஃப்ஆர்ஒய்டி (VFRYT) நிறுவனத்துடன் இணைந்து 50 மின்சார சரக்கு வாகனங்களை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், சரக்கு வாகனங்களைச் செயலி மூலம் முன்பதிவு செய்யும் டிஜிட்டல் தளத்தையும் விஎஃப்ஆர்ஒய்டி தொடங்கியுள்ளது.

இந்தத் தளத்தில் சிறிய சரக்கு வாகனங்கள் முதல் பெரிய லாரிகள் வரை தேவைக்கேற்ப முன்பதிவு செய்யலாம். ஜிபிஎஸ், ஃபாஸ்டேக் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலம் வாகனங்களின் இருப்பிடத்தையும் சரக்குகளின் நகர்வையும் கண்காணிக்க முடியும். தாமதம் ஏற்பட்டாலும் உடனடியாகத் தகவல் கிடைக்கும்.

மான்ட்ராவின் சூப்பர் கார்கோ இசிஎக்ஸ் டி பிளஸ் (Super Cargo eCX d+) வாகனத்தில் 13.8 கிலோவாட் மணி திறன் கொண்ட பேட்டரி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ.க்கு மேல் பயணிக்கலாம். 170 கன அடி சரக்குக் கொள்ளளவு கொண்ட இந்த வாகனத்தின் பேட்டரிக்கு ஐந்து ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

முந்தைய செய்தி
ஏற்றுமதியை 72 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு: அமைச்சர் கீர்த்தனா
அடுத்த செய்தி
பங்குச் சந்தை வீழ்ச்சியை விடப் பெரிய ஆபத்து

தொடர்புடைய செய்திகள்