Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உயர் நீதிமன்றத்துக்கு 9 நாட்கள் விடுமுறை: அவசர வழக்குகளுக்கு மட்டும் அனுமதி!

உயர் நீதிமன்றத்துக்கு 9 நாட்கள் விடுமுறை: அவசர வழக்குகளுக்கு மட்டும் அனுமதி!

இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மோகன், ஜி.கே.முத்துக்குமார், வி.லட்சுமி நாராயணன், என்.செந்தில்குமார், என்.ரமேஷ் ஆகியோர் விசாரிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை தாக்கல் செய்வது மற்றும் விசாரிப்பது குறித்து தலைமை பதிவாளர் தீப்தி அறிவுநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, அவசர வழக்குகளை வரும் 21-ம் தேதி தாக்கல் செய்யலாம் என்றும், அந்த வழக்குகள் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மோகன், ஜி.கே.முத்துக்குமார், வி.லட்சுமி நாராயணன், என்.செந்தில்குமார், என்.ரமேஷ் ஆகியோர் விசாரிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன், என்.திலீப்குமார் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
கென்யாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவக் காப்பீடு கட்டாயம்
அடுத்த செய்தி
மிந்த்ரா நிறுவனத்தின் வருவாய் ரூ.5,242 கோடி

தொடர்புடைய செய்திகள்