Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு

பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு

இத்திட்டம் கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

பருத்தி உற்பத்தியை மேம்படுத்தி அதிகரிக்கும் நோக்கில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்தினை ஐந்தாண்டுத் திட்டமாக செயல்படுத்த ரூ.26.21 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருத்தி இயல்பாக 1.27 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு சுமார் 2.50 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் நூற்பாலைகளின் தேவையை ஓரளவேனும் நிறைவு செய்யும் வகையில், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஊக்குவித்து பருத்தி உற்பத்தியை அதிகரிப்பது இன்றியமையாததாகும்.

 இதனை கருத்தில் கொண்டு, 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மத்திய, மாநில அரசு நிதிப் பங்களிப்புடன் ’பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ ஐந்தாண்டுத் திட்டமாக அறிவிக்கப்பட்டது.

பருத்தியில் ஒரு ஹெக்டேருக்கான மொத்த உற்பத்தியை மேம்படுத்தவும், குறுகிய மற்றும் உகந்த காலத்திற்குள் காய்கள் முதிர்ந்து அறுவடைக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தவும் நெருக்க நடவு சாகுபடி மற்றும் அடர்நடவு சாகுபடித் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பருத்தியின் தரம் மற்றும் நூற்புத் திறனை பருத்தி இழையின் நீளமே நிர்ணயிக்கிறது. பிரீமியம் ஆடைகள், மிருதுவான துணிகள் மற்றும் உயர்தர வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் தயாரிப்பதற்கு ஏற்ற மெல்லிய மற்றும் உயர்தர நூல்களைத் தயாரிக்க மிக நீண்ட இழைப் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளது. மிக நீண்ட இழைப் பருத்திக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, இத்தகைய கூறுகளைக் கொண்ட பருத்தி உற்பத்தித்திறனுக்கான இயக்கத்தின் வாயிலாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்தினைச் செயல்படுத்த ரூ.26.21 கோடிக்கு நிர்வாக அனுமதியும், முதல் தவணையாக ரூ.10.48 கோடிக்கு நிதி ஒப்பளிப்பும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நெருக்க நடவு சாகுபடி செயல்விளக்கத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.14,000, அடர்நடவு சாகுபடி செயல்விளக்கத்திற்கு ரூ.18,500, மிக நீண்ட இழைப்பருத்தி உற்பத்தி செயல்விளக்கத்திற்கு ரூ.9,500, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கத்திற்கு ரூ.7,500 மானியமாக வழங்கப்படும். மேலும், விதை, உரம், அறுவடை கூலி ஆகியற்றுக்கும் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டம் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். 

எனவே, விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி பருத்தி உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டுமென வேளாண்மைத் துறை அமைச்சர் ர.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முந்தைய செய்தி
வங்கதேசம், நேபாளம்போல இந்தியாவில் நடக்காது: பிரஹலாத் ஜோஷி
அடுத்த செய்தி
2036-ம் ஆண்டுக்குள் 7 முக்கிய பாதைகளை நான்கு வழித்தடமாக மாற்ற ரயில்வே இலக்கு

தொடர்புடைய செய்திகள்