Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மத்திய அரசு வரிப் பகிர்வு - தமிழகத்துக்கு ரூ.4,466 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசு வரிப் பகிர்வு - தமிழகத்துக்கு ரூ.4,466 கோடி ஒதுக்கீடு

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.19,208 கோடியும், பிஹாருக்கு ரூ.10,845 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.8,010 கோடியும் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பண்டிகைக்கால செலவுகள், மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஆதரவு அளிக்கும் வகையில், மாநில அரசுகளுக்கு ரூ.1,09,019 கோடி கூடுதல் வரிப் பகிர்வு நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.4,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 2-வது கூடுதல் தவணை இதுவாகும். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மாநிலங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், மூலதனச் செலவினங்களை அதிகரிக்கவும், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கான செலவுகளை மேற்கொள்ளவும் இந்த நிதி உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த கூடுதல் நிதியில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.19,208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிஹாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.8,010 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.7,866 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.7,022 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழகத்துக்கு ரூ.4,466 கோடி, ஆந்திராவுக்கு ரூ.4,597 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.4,504 கோடி, குஜராத்துக்கு ரூ.4,094 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.6,460 கோடி, ஒடிசாவுக்கு ரூ.4,819 கோடி, ஜார்க்கண்டுக்கு ரூ.3,660 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ.3,602 கோடி, அஸாமுக்கு ரூ.3,552 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த கூடுதல் நிதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
சர்வதேச சந்தையில் கால்பதிக்கும் இந்திய வாசனை திரவியங்கள்
அடுத்த செய்தி
சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா! பங்குச் சந்தையில் ரூ.190 லட்சம் கோடி இழப்பு

தொடர்புடைய செய்திகள்