Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Flight-ல போறீங்களா? இந்த 'Power Bank'-க்கு இனி No Entry!

Flight-ல போறீங்களா? இந்த 'Power Bank'-க்கு இனி No Entry!

சந்தைகளில் மலிவு விலையில் விற்கப்படும் போலி மற்றும் தரமற்ற பவர் பேங்க்குகள் விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

விமானங்களில் தரம் குறைந்த பவர் பேங்க்குகளை பயணிகள் எடுத்துச் செல்ல சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

டெல்லியிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானத்தில், ஒரு பயணி வைத்திருந்த பவர் பேங்க் திடீரென தீப்பிடித்து புகை மூட்டத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி, விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ‘மொபிகின்ஸ் எம்கே-பிபி-04’ என்ற குறிப்பிட்ட பவர் பேங்க் மாடலை இந்தியாவுக்குள்ளும், சர்வதேச அளவிலும் இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் எடுத்துச் செல்லவோ அல்லது சரக்குப் பிரிவில் ஏற்றவோ விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது.

மேலும், சந்தைகளில் மலிவு விலையில் விற்கப்படும் போலி மற்றும் தரமற்ற பவர் பேங்க்குகள் விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

விமானம் பறக்கும் நேரத்தில் பவர் பேங்க் மூலம் செல்போன்களை சார்ஜ் செய்வதற்கோ அல்லது விமான இருக்கையில் உள்ள சாக்கெட்டுகளைப் பயன்படுத்தி பவர் பேங்க்குக்கு சார்ஜ் போடுவதற்கோ முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக 100 வாட்-ஹவர் திறன் வரையிலான அங்கீகரிக்கப்பட்ட தரமான பவர் பேங்க்-கள் மட்டுமே விமானத்தில் அனுமதிக்கப்படும். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
வீழ்ச்சியடையும் உப்பு விலை: உற்பத்தியும் நிறுத்தம்: காரணம் இதுதான்
அடுத்த செய்தி
இந்தியன் வங்கியின் நிகர லாபம் 15% உயர்வு

தொடர்புடைய செய்திகள்