Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஓராண்டில் 25% சரிவடைந்த கொப்பரை தேங்காய் விலை

ஓராண்டில் 25% சரிவடைந்த கொப்பரை தேங்காய் விலை

கடந்த ஆண்டு அக்டோபரில் முதல் தரக் கொப்பரை கிலோ ரூ.218.99 முதல் ரூ.228.25 வரை விற்பனையானது. தற்போது அதிகபட்ச விலை ரூ.170.90 ஆகக் குறைந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கொப்பரை விலை கடந்த ஓராண்டில் சுமார் 25 சதவீதம் சரிந்துள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி, அரசு கொள்முதலைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், 6,399 மூட்டைகள் கொப்பரை ரூ.4.24 கோடிக்கு விற்பனையானது. ஏலத்துக்கு முதல் தரக் கொப்பரை 3,009 மூட்டைகளும், இரண்டாம் தரக் கொப்பரை 3,390 மூட்டைகளும் வரத்தாகின.


முதல் தர அன்சல்பர் கொப்பரை கிலோ ரூ.156.49 முதல் ரூ.170.90 வரை விற்பனையானது. சல்பர் பயன்படுத்தப்பட்ட முதல் தரக் கொப்பரை அதிகபட்சமாக ரூ.160.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.152.99-க்கும் விற்பனையானது. இதன் சராசரி விலை கிலோ ரூ.158.72.

இரண்டாம் தர அன்சல்பர் கொப்பரை கிலோ ரூ.145.36 முதல் ரூ.154 வரை விற்பனையானது. சல்பர் பயன்படுத்தப்பட்ட இரண்டாம் தரக் கொப்பரை அதிகபட்சமாக ரூ.145.10-க்கும், சராசரியாக ரூ.135.90-க்கும் விற்பனையானது. இதன் குறைந்தபட்ச விலை ரூ.40.99.

கடந்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் முதல் தரக் கொப்பரை கிலோ ரூ.218.99 முதல் ரூ.228.25 வரை விற்பனையானது. தற்போது அதிகபட்ச விலை ரூ.170.90 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் அதிகபட்ச விலையுடன் ஒப்பிடும்போது இது சுமார் 25 சதவீதம் சரிவாகும்.

கொப்பரை விலை சரிவால் விவசாயிகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்திரராசு, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதுடன், விவசாயிகள் நஷ்டத்தில் விற்பனை செய்வதைத் தவிர்க்கும் வகையில் அரசு கொள்முதலைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2026-27 பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு, அரவை கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.12,027 ஆகவும், பந்து கொப்பரைக்கு ரூ.12,500 ஆகவும் நிர்ணயித்துள்ளது. இது முறையே கிலோவுக்கு ரூ.120.27 மற்றும் ரூ.125 ஆகும்.

முந்தைய செய்தி
ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய மஹிந்திராவின் சரக்கு வாகனம் அறிமுகம்
அடுத்த செய்தி
நீரில் மூழ்கி நெற்பயிர்கள் வீணாகும் அபாயம்

தொடர்புடைய செய்திகள்