Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழகத்தில் முதல் ஆலை தொடங்கிய ‘ஓம்ரான்’ நிறுவனம்

தமிழகத்தில் முதல் ஆலை தொடங்கிய ‘ஓம்ரான்’ நிறுவனம்

இந்தியாவில் அதிகரித்து வரும் இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனை சாதனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த ஆலை முக்கியப் பங்காற்றும்.

பகிரவும் WhatsApp Facebook

ஜப்பானைச் சேர்ந்த முன்னணி மருத்துவ உபகரணத் தயாரிப்பு நிறுவனமான 'ஓம்ரான் ஹெல்த்கேர்', இந்தியாவில் தனது முதல் தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் அமைத்துள்ளது.

சென்னை அருகே பொன்னேரியில் உள்ள ‘ஆரிஜின்ஸ் பை மஹிந்திரா’ தொழிற்பூங்காவில் ஜப்பானின் ‘ஓம்ரான்’ நிறுவனம் தனது முதல் ஆலையை அமைத்துள்ளது. இந்த நவீன ஆலையில் வணிகரீதியான பிபி மானிட்டர்கள் உற்பத்தி தற்போது முறைப்படி தொடங்கியுள்ளது. 

இந்தியாவில் அதிகரித்து வரும் இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனை சாதனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த ஆலை முக்கியப் பங்காற்றும். தொடக்கக் கட்டமாக உள்நாட்டுச் சந்தைக்காக மட்டுமே பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 

வரும் 2028-ம் ஆண்டுக்குள் உற்பத்தித் திறனைப் பத்து மடங்கு உயர்த்தி, ஆண்டுக்கு 30 லட்சம் மானிட்டர்களைத் தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியச் சந்தையின் தேவையை நிறைவு செய்வதுடன், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன்னணி மையமாகத் தமிழ்நாடு உருவெடுக்கும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இத்திட்டத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

முந்தைய செய்தி
PM Modi congratulates successful NVS 03 launch
அடுத்த செய்தி
சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வலியுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்