Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிபிஆர் வருகையின்போது மின்தடை: இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்

சிபிஆர் வருகையின்போது மின்தடை: இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்

மின்தடை விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.

பகிரவும் WhatsApp Facebook

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசு துணைத் தலைவர் வந்தபோது மின்தடை ஏற்பட்ட நிலையில், மின்வாரிய இளநிலைப் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த அக்.30-ம் தேதி மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன், தமிழக ஆளுநர் அர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோரும் வந்தனர். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது திடீரென மின்சாரம தடைபட்டது.

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எரிசக்தி துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். மின்தடை விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவரின் வருகையின்போது மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட்ட விவகாரத்தில் இளநிலைப் பொறியாளர் ஜானகிராமனை பணியிடை நீக்கம் செய்து மின்சாரத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
அடுத்த செய்தி
அன்பில் மகேஸுக்கு 3 நாள் போலீஸ் காவல்

தொடர்புடைய செய்திகள்