Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று (நவ. 2) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, பலத்த காற்று வீசக்கூடும். மேலும், அப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 


மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் வட தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Over 5,000 take TNPSC exams in Karur
அடுத்த செய்தி
சிபிஆர் வருகையின்போது மின்தடை: இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்

தொடர்புடைய செய்திகள்