Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின் தட்டுப்பாட்டுக்கு முந்தைய ஆட்சிகளே காரணம்: துரை வைகோ

மின் தட்டுப்பாட்டுக்கு முந்தைய ஆட்சிகளே காரணம்: துரை வைகோ

களத்தில் இருக்க வேண்டிய கவுன்சிலர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய முறையில் பொதுமக்களைச் சந்திக்கவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக மின் உற்பத்தி கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்காததே தற்போதைய மின் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என திருச்சி எம்.பி. துரை வைகோ கூறினார். திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஏற்கெனவே தமிழக அரசுக்கு சுமார் ரூ.13 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது.

இதனால், உடனடியாக கடன் சுமையைக் குறைப்பது சாத்தியமில்லை. இருப்பினும், டெண்டர் முறைகேடுகள் தற்போதைய ஆட்சியில் பெருமளவு குறைந்துள்ளன. இது எதிர்காலத்தில் கடன் சுமையைக் குறைக்க உதவும்.

சென்னையில் மழை வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக முந்தைய அரசு ரூ.4,000 கோடி செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்பணிகள் முறையாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டனவா என்ற கேள்வி எழுகிறது. சுமார் 24 கி.மீ., தொலைவுக்கு மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டும், அவை மற்ற கால்வாய்களுடன் முழுமையாக இணைக்கப்படாததால் பல இடங்களில் பயனற்ற நிலையில் உள்ளன.

வெள்ள நிவாரணப் பணிகளில் அமைச்சர்களும் அரசு ஊழியர்களும் களத்தில் நின்று பணியாற்றினர். ஆனால், களத்தில் இருக்க வேண்டிய கவுன்சிலர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய முறையில் பொதுமக்களைச் சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
சிறைவாசிகள் எழுதிய 85 புத்தகங்கள் வெளியீடு
அடுத்த செய்தி
Chennai Metro invites bids for advertising on trains and stations

தொடர்புடைய செய்திகள்