Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னையில் Rolls-Royce ஷோ ரூம்: நாமளே டிசைன் பண்ணிக்கலாம்!

சென்னையில் Rolls-Royce ஷோ ரூம்: நாமளே டிசைன் பண்ணிக்கலாம்!

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான தனிப்பட்ட அம்சங்களைத் தேர்ந்தெடுத்து கார்களை வடிவமைத்து கொள்ளும் வகையில் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பிரத்யேக வாகனங்களை வடிவமைக்கும் வசதிகளுடன் தனது புதிய விற்பனையகத்தை சென்னை மீனம்பாக்கத்தில் ‘ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ்’ திறந்துள்ளது.


நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் விற்பனைப் பிரிவு இயக்குநர் ஜூலியன் ஜென்கின்ஸ் திறந்து வைத்தார்.


பிறகு, அவர் விழாவில் பேசியதாவது: கடந்த 122 ஆண்டுடாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ‘சூப்பர் லக்சரி’ பிரிவில் உலக அளவில் பிரத்யேக இடத்தை தக்கவைத்துள்ளது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்குபவர்களின் சராசரி வயது கணிசமாக குறைந்துள்ளது. தற்போது 40-களின் தொடக்கத்தில் உள்ளவர்கள் அதிகம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்குகின்றனர். 

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான வண்ணம், உட்புற அலங்காரம் மற்றும் தனிப்பட்ட அம்சங்களைத் தேர்ந்தெடுத்து கார்களை வடிவமைத்து கொள்ளும் வகையில் ‘பிஸ்போக் கமிஷனிங் அட்லியர்’ என்ற தனிப் பகுதியுடன் இந்த புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 44,000 வண்ண தேர்வுகளையும் வழங்குகிறோம். இந்தியாவில் கடந்த 4 ஆண்டாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. புதிய மாடலான 'கோஸ்ட் சீரிஸ் 2' வரும் நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது இவ்வாறு இயக்குநர் ஜூலியன் ஜென்கின்ஸ் பேசினார். 

நிகழ்வில் ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் சென்னை முதன்மை டீலர் வசந்தி பூபதி, மண்டல பொது மேலாளர் கென்னி அவுலியா, கே.யு.என் குழும தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி
யோசனை வழங்கும் ஊழியர்களுக்கு விருந்து: Air India
அடுத்த செய்தி
TATA கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் 86% உயர்வு

தொடர்புடைய செய்திகள்