Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மஞ்சள் சாகுபடியை அதிகரிக்க ரூ.88 லட்சம் ஒதுக்கீடு

மஞ்சள் சாகுபடியை அதிகரிக்க ரூ.88 லட்சம் ஒதுக்கீடு

பெருந்துறை சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.15,786 முதல் ரூ.17,399 வரை ஏலம் போய், சராசரி விலை ரூ.16,593 ஆகப் பதிவாகியுள்ளது

பகிரவும் WhatsApp Facebook

ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வரும் மஞ்சள் சாகுபடி பரப்பளவை மீண்டும் அதிகரிக்கும் நோக்கில், தோட்டக்கலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.40,000 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக நிலவிய நீராதாரச் சிக்கல்கள் மற்றும் கீழ்பவானி பாசனக் கால்வாயில் தண்ணீர் திறப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் மாவட்டத்தில் வழக்கமான 4,500 ஹெக்டேர் சாகுபடியில் சுமார் 750 ஹெக்டேர் வரை பரப்பு குறைந்திருந்தது. தற்போதைய நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 220 ஹெக்டேர் கூடுதல் நிலப்பரப்பில் மஞ்சள் சாகுபடியை விரிவுபடுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தரவுகளின்படி, ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படும் பிஎஸ்ஆர்-3 ரகம் 240 முதல் 250 நாட்களில் அறுவடைக்கு வந்து ஹெக்டேருக்கு சராசரியாக 51 டன் வரை பசுமஞ்சள் மகசூல் அளிக்கும் திறன் கொண்டது. ஈரோடு உள்ளூர் ரகம் ஹெக்டேருக்கு 30 முதல் 32 டன்னும், பிஎஸ்ஆர்-2 ரகம் 240 நாட்களில் 30 டன்னுக்கு மேலும் மகசூல் தருகின்றன. பொதுவாக ஒரு ஹெக்டேரில் இருந்து பெறப்படும் 25 முதல் 30 டன் பசுமஞ்சளைப் பதப்படுத்தினால் 5 முதல் 7 டன் உலர் மஞ்சள் கிடைக்கிறது. இது ஏக்கர் கணக்கில் 10 முதல் 12 டன் பசுமஞ்சள் மற்றும் 2 முதல் 3 டன் உலர் மஞ்சளுக்குச் சமமாகும்.

பெருந்துறை சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.15,786 முதல் ரூ.17,399 வரை ஏலம் போய், சராசரி விலை ரூ.16,593 ஆகப் பதிவாகியுள்ளது. மசாலா வாரியத்தின் (Spices Board) புள்ளிவிவரங்களின்படி, 2024–25ம் நிதியாண்டில் இந்தியாவில் 2.91 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு, 11.16 லட்சம் டன் உலர் மஞ்சள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
திருச்சியில் ஏர் எக்ஸ்பிரஸ் கொரியர் கார்கோ சேவை
அடுத்த செய்தி
‘அக்தா ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்’ முதலீட்டு திட்டம் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்