Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த ஆவின் நிறுவனம் தமிழக அரசுக்கு பரிந்துரை

பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த ஆவின் நிறுவனம் தமிழக அரசுக்கு பரிந்துரை

ஆவின் நிறுவனம் வாயிலாக நாள்தோறும் சுமார் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என மாநில அரசுக்கு, ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் வாயிலாக நாள்தோறும் சுமார் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் தினமும் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆரஞ்சு நிறம் 500 மி.லி. பால் பாக்கெட் ரூ.30-க்கும், பச்சை மற்றும் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் ரூ.24-க்கும், நீல நிற பால் பாக்கெட் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.


தற்போதைய சந்தை நிலவரப்படி, தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.75-க்கு மேல் விற்பனை செய்து வருகின்றன. தனியாரைவிட ஆவின் பால் விலை மிகக் குறைவாக இருப்பதன் காரணமாக, ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் இனிப்பகங்கள் போன்ற வணிகத் தேவைகளுக்காக ஆவின் பால் அதிகளவில் வாங்கப்படுகிறது. இதனால், சாதாரண நுகர்வோருக்கு ஆவின் பாலகங்களில் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.


மேலும், ஒரு பால் பாக்கெட் விற்பனை செய்வதன் மூலம் ஆவின் பாலகம் நடத்துவோருக்கு 75 காசுகள் மட்டுமே கமிஷனாக கிடைக்கிறது. தற்போதைய பொருளாதாரச் சூழலில், கடை வாடகை, மின்கட்டணம் உள்ளிட்ட செலவுகளைச் சமாளித்து பாலகங்களை நடத்த முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். இதன் காரணமாக, புதிதாகத் திறக்கப்படும் பல ஆவின் பாலகங்கள் சில மாதங்களிலேயே மூடப்படும் அவல நிலை பல மாவட்டங்களில் தொடர்கதையாகி உள்ளது.


இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என அரசுக்கு, ஆவின் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து ஆவின் வட்டாரங்கள் கூறுகையில், “பால் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்ததால் விவசாயிகள், ஆவின் நிர்வாகம் மற்றும் பாலகங்களை நடத்துவோர் என அனைவருமே சிரமத்தை சந்தித்து வந்தனர். தற்போது பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்திவிட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். எனவே, ஆவின் நிர்வாகம் மற்றும் பாலகங்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.5 ரூபாய் விலை உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்த உயர்வு அமலுக்கு வரும்பட்சத்தில் லிட்டருக்கு ஆவின் நிர்வாகத்துக்கு ரூ.4-ம், பாலகம் நடத்துவோருக்கு ரூ.1-ம் கிடைக்கும். அண்டை மாநிலமான கர்நாடகாவில் சமீபத்தில் லிட்டருக்கு ரூ.8 வரை பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், நாம் அதைவிடக் குறைவாகவே பரிந்துரைத்துள்ளோம். அரசின் முறையான ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்தன.


முந்தைய செய்தி
Aavin faces hurdles in achieving Deepawali sweets sales
அடுத்த செய்தி
திருச்சி வந்த முதல்வருக்கு அதிகாரிகள் வரவேற்பு!

தொடர்புடைய செய்திகள்