Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு - முழு விவரம்

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு - முழு விவரம்

தெற்கு ரயில்வே சென்னை மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இடையில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஆயுத பூஜையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சென்னை மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இடையில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.16-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06023), மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும். கோவை போத்தனூரில் இருந்து அக்.17-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ரயில் (06024) அதே நாள் இரவு 11.55 மணிக்கு சென்னை வந்து சேரும்.


மற்றொரு சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06033), மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் போய்ச்சேரும். அங்கிருந்து 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் (06034) மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த 2 ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.


தாம்பரத்தில் இருந்து அக்.19-ம் தேதி திங்கட்கிழமை இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் (06089), மறுநாள் பகல் 12.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். அங்கிருந்து, அக்.20-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் (06090) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ரயில் நிலையங்களில் நின்று புறப்படும்.


ஈரோட்டில் இருந்து அக்.16-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06145), மறுநாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து அக்.20-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 11.40 மணிக்கு புறப்படும் ரயில் (06146) மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்துச் சேரும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, ஆகிய ரயில்நிலையங்களில் நின்று வரும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.19-ம் தேதி திங்கள்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06083), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்று சேரும். கொல்லத்தில் இருந்து அக்.20-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06084) மறுநாள் முற்பகல் 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும்.

முந்தைய செய்தி
Bumble to go private in $1.3 billion deal
அடுத்த செய்தி
Airtel pivots to data centres, sovereign cloud “next area of focus”: Sunil Bharti Mittal

தொடர்புடைய செய்திகள்