Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நடப்பாண்டில் ரூ.2.95 லட்சம் கோடி அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்

நடப்பாண்டில் ரூ.2.95 லட்சம் கோடி அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்

கடந்த ஜூலை மாதத்தில் ரூ.20,200 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.29,631 கோடியும் முதலீடு செய்திருந்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பாண்டில் இதுவரை இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து ரூ.2.95 லட்சம் கோடி முதலீட்டை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்புகள், இந்திய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறித்த கவலைகள் ஆகியவை அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறியதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.34,843 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.35,861 கோடியை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றனர். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்தியச் சந்தையில் இருந்து கணிசமான அளவில் அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது.

இதற்கு மாறாக, கடந்த ஜூலை மாதத்தில் ரூ.20,200 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.29,631 கோடியும் முதலீடு செய்திருந்தனர். அக்டோபர் மாத வெளியேற்றத்தையும் சேர்த்தால், 2026-ம் ஆண்டில் இதுவரை இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.2.95 லட்சம் கோடியை திரும்ப பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மாற்றமில்லை என அறிவித்தது. இந்தியாவின் முன்னணி நிறுவனப் பங்குகளின் மதிப்பீடுகள் கவர்ச்சிகரமாக இருப்பது, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருப்பதற்கான அறிகுறிகள் ஆகியவை அந்நிய முதலீட்டாளர்களின் அணுகுமுறை மாறுவதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும், சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான முதலீட்டு ஆர்வத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் முதலீட்டாளர்களின் பங்குத் தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, மற்றும் அமெரிக்கா - ஈரான் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் நிலவரம், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஆகியவை அடுத்தகட்டமாக அந்நிய முதலீட்டாளர்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முந்தைய செய்தி
வாகன விற்பனை அதிகரிப்பு - ஆட்டோமொபைல் பங்குகள் உயர்வு
அடுத்த செய்தி
Strong housing demand to accelerate new launches in H2 FY27

தொடர்புடைய செய்திகள்