Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வாகன விற்பனை அதிகரிப்பு - ஆட்டோமொபைல் பங்குகள் உயர்வு

வாகன விற்பனை அதிகரிப்பு - ஆட்டோமொபைல் பங்குகள் உயர்வு

அசோக் லேலண்ட் பங்கு 2.26 சதவீதம் உயர்ந்து ரூ.148.10-க்கும் வர்த்தகமானது.

பகிரவும் WhatsApp Facebook

அக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, நேற்று பங்குச் சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.

வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் மாருதி சுஸுகி பங்கு 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து ரூ.11,769-ஐ எட்டியது. டாடா மோட்டார்ஸ் பங்கு 2.6 சதவீதம் உயர்ந்து ரூ.272.30-க்கும், அசோக் லேலண்ட் பங்கு 2.26 சதவீதம் உயர்ந்து ரூ.148.10-க்கும் வர்த்தகமானது.


அக்டோபரில் மாருதி சுஸுகி வாகன விற்பனை 25 சதவீதம் அதிகரித்து 2,76,120 ஆக உயர்ந்தது. டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகன விற்பனை 27 சதவீதமும், அசோக் லேலண்ட் விற்பனை 23 சதவீதமும் அதிகரித்தன.


டிவிஎஸ் மோட்டார் விற்பனையும் 29 சதவீதம் வளர்ச்சி கண்டது. இருப்பினும், ஐஷர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ பங்குகள் வர்த்தகத்தின் இடையே சரிவைச் சந்தித்தன.

 பண்டிகைக்கால தேவை வாகன விற்பனைக்கு ஆதரவாக இருந்தாலும், மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் விநியோகச் சிக்கல்கள் வரும் மாதங்களில் சவாலாக இருக்கலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
என்எஸ்இ பங்கு 30% உயர வாய்ப்பு
அடுத்த செய்தி
நடப்பாண்டில் ரூ.2.95 லட்சம் கோடி அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்

தொடர்புடைய செய்திகள்