Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியன் வங்கியின் சிறப்பு டெபாசிட்களுக்கு வட்டி உயர்வு

இந்தியன் வங்கியின் சிறப்பு டெபாசிட்களுக்கு வட்டி உயர்வு

‘இண்ட் க்ரோ’ திட்டத்துக்கான வட்டி விகிதம் 6.65 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாகவும், ‘இண்ட் பிராஸ்பர்’ திட்டத்துக்கான வட்டி 6.60 சதவீதத்தில் இருந்து 6.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியன் வங்கி சிறப்பு டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை 0.15 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.


இது தொடர்பாக வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘இண்ட் க்ரோ’ (555 நாட்கள்), ‘இண்ட் பிராஸ்பர்’ (777 நாட்கள்) ஆகிய சிறப்பு நிரந்தர வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம், 0.15 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதன்படி, ‘இண்ட் க்ரோ’ திட்டத்துக்கான வட்டி விகிதம் 6.65 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாகவும், ‘இண்ட் பிராஸ்பர்’ திட்டத்துக்கான வட்டி 6.60 சதவீதத்தில் இருந்து 6.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தச் சிறப்பு வைப்புத் திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அருகிலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
13 feet python rescued near Gudiyatham
அடுத்த செய்தி
திருத்தப்பட்ட GST படிவங்கள் - நவ.1 முதல் கருத்து தெரிவிக்கலாம்

தொடர்புடைய செய்திகள்