Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கருப்பர் நகரம் படத்துக்கு இடைக்கால தடை

கருப்பர் நகரம் படத்துக்கு இடைக்கால தடை

இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் தொடங்கப்பட்ட 'கருப்பர் நகரம்' திரைப்படத்தை அக்டோபர்-27 வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இயக்குனர் கோபி நயினார் தன்னுடைய கதை, இயக்கத்தில் தொடங்கிய 'கருப்பர் நகரம்' படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, தயாரிப்பாளர் கங்காதரன், படத்தை ரமேஷ் என்பவருக்கு விற்றுவிட்டார்.

இந்நிலையில், கோபி நயினாரின் தடையில்லாச் சான்று பெறாமலும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள பாக்கியை தராமலும் தயாரிப்பாளர் ரமேஷ் இயக்குனர் கோபி நயனார் எடுத்த காட்சிகளை அவருடைய அனுமதி இல்லாமல் வேறு ஒருவரை வைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

 
தன்னுடைய தடையில்லா சான்றிதழ் இல்லாமலும் தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்காமலும் 'கருப்பர் நகரம்' திரைப்படத்தை வெளியிட தடை கேட்டு இயக்குனர் கோபி நாயினார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, வழக்கு தொடர்பாக அக்டோபர் 27-க்குள் தயாரிப்பாளர் ரமேஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், அதுவரை 'கருப்பர் நகரம்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி
Jaishankar flags concern over West Asia situation
அடுத்த செய்தி
Asian coal prices to stay elevated

தொடர்புடைய செய்திகள்