Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட நவீன ஆய்வகம்

சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட நவீன ஆய்வகம்
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, செயின்ட் கோபைன் நிறுவன ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி என்.ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்துவைத்தனர்.

ஐஐடியின் குறைந்த கார்பன் மற்றும் சிக்கன கட்டுமானத் தொழில்நுட்ப மையத்தில் 'கேரன்' மற்றும் 'டிஆர்எஸ்டிஐ' ஆகிய இரண்டு புதிய ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் குறைந்த கார்பன் உமிழ்வுக்கு நிலையான மற்றும் இலகுவான கட்டுமானத் தொழில்நுட்பங்களை உருவாக்க சென்னை ஐஐடி-செயின்ட் கோபைன் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளன. 3 ஆண்டுக்கு இந்த ஆராய்ச்சி ஒப்பந்தில், ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் 2 நவீன ஆராய்ச்சி ஆய்வகங்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளன.

ஐஐடியின் குறைந்த கார்பன் மற்றும் சிக்கன கட்டுமானத் தொழில்நுட்ப மையத்தில் 'கேரன்' மற்றும் 'டிஆர்எஸ்டிஐ' ஆகிய இரண்டு புதிய ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றால் அடுத்த தலைமுறைக்கான கான்கிரீட் கலவைப் பொருட்கள், உள்கட்டமைப்புக்கான நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த புதிய மையங்களை செயின்ட் கோபைன் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி என்.ஸ்ரீதர், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி ஆகியோர் முறைப்படி திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசுகையில், "இந்த ஆய்வகங்களால், ஆராய்ச்சிகளை நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவ முடியும்" என்றார்.

செயின்ட் கோபைன் அதிகாரி ஸ்ரீதர் பேசும்போது, "கல்வித்துறையின் ஆராய்ச்சியையும் தொழில் துறையின் அனுபவத்தையும் இணைத்து இந்திய காலநிலைக்கு ஏற்ற நிலையான கட்டுமான தீர்வுகளை உருவாக்குவதே இதன் நோக்கம்" என்றார். இந்த திட்டத்தால், கட்டுமானச் செலவு பெருமளவு குறைவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
செபி எச்சரிக்கையால் பிசி ஜுவல்லர் பங்கு 3.62% சரிவு
அடுத்த செய்தி
ரிலையன்ஸ் பங்கு இலக்கு விலை ரூ.1,710

தொடர்புடைய செய்திகள்