Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரிலையன்ஸ் பங்கு இலக்கு விலை ரூ.1,710

ரிலையன்ஸ் பங்கு இலக்கு விலை ரூ.1,710

ரிலையன்ஸ் பங்கின் இலக்கு விலையை ரூ.1,703-ஆக நிர்ணயித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சிறப்பான லாபத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு நேற்று 11.60 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு, முந்தைய முடிவு விலையான ரூ.1,164.90-லிருந்து 11.60 சதவீதம் உயர்ந்து ரூ.1,300-க்கு வர்த்தகத்தை நேற்று நிறைவு செய்தது.

 
செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், முந்தைய ஆண்டைவிட 40.6 சதவீதம் அதிகரித்து ரூ.25,548 கோடியாக உயர்ந்தது. செயல்பாட்டு வருவாய் 28 சதவீதம் அதிகரித்து ரூ.3.38 லட்சம் கோடியை எட்டியது.


சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரிப்பு, தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வு ஆகியவை வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
ரிலையன்ஸ் பங்கின் இலக்கு விலையை ரூ.1,710 ஆக ஜெஃப்ரீஸ் நிர்ணயித்துள்ளது. இது முந்தைய குறிப்பு விலையிலிருந்து 47 சதவீத உயர்வைக் குறிக்கிறது.


அதேநேரம், நோமுரா நிறுவனம் இலக்கு விலையை ரூ.1,690-லிருந்து ரூ.1,560 ஆக, சுமார் 7.7 சதவீதம் குறைத்துள்ளது. இருப்பினும், 34 சதவீத உயர்வுக்கு வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. சில்லறை வணிகப் பிரிவின் லாபம் குறைந்திருப்பதே நோமுராவின் எச்சரிக்கையான மதிப்பீட்டுக்குக் காரணமாகும்.


நுவாமா நிறுவனம் ரிலையன்ஸ் பங்கின் இலக்கு விலையை ரூ.1,703-ஆக நிர்ணயித்துள்ளது. மற்ற தரகு நிறுவனங்களும் சாதகமான மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி
சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட நவீன ஆய்வகம்
அடுத்த செய்தி
என்எஸ்இ பங்கு 30% உயர வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்