Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அரிசி விலை உயர்வு - ஜிஎஸ்டி விலக்கு அவசியம்

அரிசி விலை உயர்வு - ஜிஎஸ்டி விலக்கு அவசியம்

ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாட்டில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், 5 , 10 மற்றும் 25 கிலோ பொட்டலங்களில் விற்கப்படும் பிராண்டட் மற்றும் பிராண்ட் இல்லாத அரிசிக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.சந்திரமோகன் கூறுகையில், சிறு அளவு பொட்டலங்களில் அரிசி வாங்கும் பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி கூடுதல் சுமையாக இருப்பதாகவும், 25 கிலோவுக்கு மேல் வாங்குவோருக்கு அந்த வரி இல்லை என்றும் அவர் கூறினார்.


கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் பருவமழை குறைவால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சன்ன ரக நெல் தேவையில் கிட்டத்தட்ட 90 சதவீதம் கர்நாடகாவையே சார்ந்துள்ளோம். சன்ன ரக நெல் விலை கிலோவுக்கு ரூ.43-லிருந்து ரூ.53 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவிலேயே ஆலைகள் நெல்லை வாங்குவதால் தமிழ்நாட்டுக்கு வருகை குறைந்துள்ளது.


தமிழ்நாட்டில் 1,200-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இருந்தாலும், நெல் வராத நிலையில் தற்போது 5 சதவீத ஆலைகள் மட்டுமே இயங்குகின்றன. மோட்டா ரக நெல்லுக்கு அரசு கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.27 ஆகவும், சன்ன ரக நெலுக்கு ரூ.27.50 ஆகவும் உள்ளதால், பெரும்பாலான விவசாயிகள் மோட்டோ ரக நெல் சாகுபடி செய்கின்றனர்; இதனால் மக்கள் விரும்பும் சன்ன அரிசிக்கு தமிழகம் அயல் மாநிலங்களைச் சார்ந்துள்ளது.


ஆந்திரா மற்றும் தெலங்கானாவைப் போன்று சன்னரக நெல்லுக்கு கிலோக்கு ரூ.5 வரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நவம்பரில் எதிர்பார்க்கப்படும் கர்நாடக அறுவடை சாதாரண அளவில் 60 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும், அம்மாநில அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளதாலும், வடகிழக்குப் பருவமழை அங்கு பயனளிக்காததாலும் நெல் வரவு உடனடியாக மேம்படாது.

 
நவீன அரிசி ஆலைகள் கடன் சுமையில் இருப்பதாகவும், நெல் வாங்கும்போது ரொக்கம் கொடுக்க வேண்டிய நிலையிலும், அரிசி விற்பனை கடன் அடிப்படையில் நடைபெறுவதாலும் ஆலை உரிமையாளர்கள் நிதி நெருக்கடியில் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி
11 மாதங்களில் 3% உயர்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி
அடுத்த செய்தி
சர்க்கரை விலையால் எகிறும் தீபாவளி இனிப்புகள் விலை

தொடர்புடைய செய்திகள்