Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழகம் முழுவதும் நாளை 500 இடங்களில் விவசாய சங்கங்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் நாளை 500 இடங்களில் விவசாய சங்கங்கள் போராட்டம்

எல்நினோ மற்றும் மழை குறைவால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வறட்சி நிவாரணமும், வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகம் முழுவதும் 500 இடங்களில் இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில், சாலை மறியல் போராட்டம் நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) பொதுச்செயலாளர் பி எஸ். மாசிலாமணி, விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் (சிபிஐஎம்) சாமி. நடராஜன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில பொதுச்செயலாளர் (சிபிஐஎம்எல்) அ. சந்திரமோகன் ஆகியோர் சார்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: 'கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை தேர்தல் வாக்குறுதிப்படி உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். எல்நினோ மற்றும் மழை குறைவால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வறட்சி நிவாரணமும், வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்புபடி கர்நாடகம் காவிரியில் மாதவாரியாக தர வேண்டிய தண்ணீரைப் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
முந்தைய செய்தி
நிலக்கரி இறக்குமதி திட்டத்தை நிறுத்திய இந்தியா
அடுத்த செய்தி
பழனி கோயில் ரோப் கார் சேவை திடீர் நிறுத்தம்

தொடர்புடைய செய்திகள்