Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை தெரியுமா? லிஸ்ட் இதோ!

இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை தெரியுமா? லிஸ்ட் இதோ!

சில இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

நாளை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

செல்போன்களில் ஒலித்த எச்சரிக்கை

இதற்கிடையே, இன்று சென்னையில் பலரது செல்போன்களிலும் திடீரென அவசர எச்சரிக்கை ஒலி எழுந்ததுடன், குறுஞ்செய்தி மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவசரகாலங்களில் மக்களுக்கு விரைவாகத் தகவல்களைச் சென்றடையச் செய்யும் வகையில் செல்போன் வழி எச்சரிக்கை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய அறிவிப்புகள் கிடைக்கும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து, அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம்.

முந்தைய செய்தி
அமெரிக்காவில் 330 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் இந்தியா
அடுத்த செய்தி
Demat கணக்குகளில் குவியும் தங்க முதலீடு

தொடர்புடைய செய்திகள்