Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இடைத்தேர்தலில் வென்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்பு

இடைத்தேர்தலில் வென்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட தவெக எம்எல்ஏக்கள்

இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர்.

பகிரவும் WhatsApp Facebook

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர்.


சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதனால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. 


இத்தேர்தலில், தவெக சார்பில் போட்டியிட்டு இருவரும் வெற்றி பெற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னிலையில், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் எம்எல்ஏக்களாக நேற்று காலை பதவியேற்றனர்.

 இதன் மூலம் தவெக எம்எல்ஏக்களின் பலம் 109 ஆனது. பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், வெங்கட ரமணன், ராஜ்மோகன் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


முந்தைய செய்தி
அமெரிக்காவில் புயல் பாதிப்பு: கலிபோர்னியாவில் வீடுகள் சேதம்
அடுத்த செய்தி
நாட்டுக்கோழி விலை உயர்வு - என்ன காரணம்?

தொடர்புடைய செய்திகள்