Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உஷா நிறுவனத்தின் புதிய மின்விசிறிகள் - விலை எவ்வளவு தெரியுமா?

உஷா நிறுவனத்தின் புதிய மின்விசிறிகள் -  விலை எவ்வளவு தெரியுமா?

உஷா ப்ளூம் சீரிஸ் வரிசையில் 6 அசத்தலான மின்விசிறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் பிராண்டுகளில் ஒன்றான உஷா இன்டர்நேஷனல், தனது உஷா ப்ளூம் சீரிஸ் வரிசையில் 6 அசத்தலான மின்விசிறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


நவீன இல்லங்களுக்கு ஏற்ற சமகால வடிவமைப்பு, எரிசக்தி சேமிக்கும் செயல்திறன் மற்றும் கூடுதல் சௌகரியம் ஆகியவற்றை ஒருங்கே வழங்கும் வகையில், புதிய சீலீங் மின்விசிறிகளுக்கு, சன்ஸ்பையர் க்ளோ, லில்லி க்ளோ, லில்லி நோவா, டாலியா, ப்ளூமேரியா மற்றும் ஹெலினியம் என பெயரிடப்பட்டுள்ளது. 


வீடுகளின் உள் அலங்காரங்களுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ப்ளூம் சீரிஸ், மலர்களால் ஈர்க்கப்பட்ட டிசைன்களுடன் மேம்பட்ட பிஎல்டிசி தொழில்நுட்பத்தையும் இணைக்கிறது. 

இதனால், வெறும் 34 வாட் என்ற குறைந்த மின் நுகர்வில், மிக அமைதியாகவும், எரிசக்தியைச் சேமிக்கும் வகையிலும் இந்த மின்விசிறிகள் இயங்குகின்றன. மாடலைப் பொறுத்து, இவை 350 ஆர்பிஎம் வரையிலான வேகத்துடன், நிமிடத்துக்கு 225 கன மீட்டர் வரை சக்திவாய்ந்த காற்றோட்டத்தை வழங்குகின்றன.

அன்றாடப் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், தூசு மற்றும் கீறல்களைத் தாங்கும் பிளேடுகள், 'பாயிண்ட் எனிவேர்' ஆர்எஃப் ரிமோட், ஸ்மார்ட் டாகிள் ரெக்கவரி மற்றும் சேஃப்டி வயர் ஆகியவை இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன. 

குறிப்பிட்ட சில மாடல்களில் பூஸ்ட் மற்றும் ஸ்லீப்/டைமர் மோட்களும் உள்ளன. உஷா ப்ளூம் சீரிஸ் மின்விசிறிகளின் விலை, அனைத்து வரிகளும் சேர்த்து, ரூ.7,152 முதல் ரூ.10,296 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ரூ.491 கோடி வருவாய் ஈட்டிய சிறப்பு தூய்மை இயக்கம்
அடுத்த செய்தி
பஜாஜ் ஃபைனான்ஸ் நிகர லாபம் 29% உயர்வு

தொடர்புடைய செய்திகள்