Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ விஞ்ஞானிகள் 3 பேருக்கு நோபல் பரிசு

‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ விஞ்ஞானிகள் 3 பேருக்கு நோபல் பரிசு

ஆப்டோஜெனெடிக்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக விஞ்ஞானிகள் கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நரம்பு செல்களைக் கட்டுப்படுத்த ஒளியைப் பயன்படுத்தும் 'ஆப்டோ ஜெனெடிக்ஸ்' முறை குறித்து ஆய்வுக்காக விஞ்ஞானிகள் கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகமன், ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு 2026-ம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளமிடோமோனாஸ் எனப்படும் ஒற்றை செல் பாசி குறித்து ஹெகமன், நாகல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அந்தப் பாசியின் மேற்பரப்பில் 'சேனல்ரோடாப்சின்' எனப்படும் புரதத்தை அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்தப் புரதத்துக்கான மரபணுவை எலிகளின் நரம்பு செல்களுக்குள் செலுத்தி ஆராய்சசி செய்தனர். புரதத்தின் மீது நீல நிற ஒளியைச் செலுத்துவதன் மூலம், நரம்பு சமிக்ஞையைத் தூண்ட முடிந்தது. இத்தொழில்நுட்பம் 'ஆப்டோஜெனெடிக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது.


அதாவது, ஒளியைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட நரம்பு செல்களைச் செயல்படுத்தவும், குறிப்பிட்ட நினைவுகள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளை ஆராயவும் வழிவகுக்கிறது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் பார்வையை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பாகவும் இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.


2026-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகை ரூ.11.5 கோடியாகும். இந்த தொகை 3 வெற்றியாளர்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட மருத்துவப் பேராசிரியர்களைக் கொண்ட குழு நோபல் பரிசாளர்களைத் தேர்வு செய்கிறது. ஸ்டாக்ஹோம் நகருக்கு அருகிலுள்ள சோல்னாவில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவன அரங்கில் நோபல் விருது அறிவிக்கப்பட்டது.


தற்போது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளன.

முந்தைய செய்தி
பிளேக் நோய் ஆய்வகத்தில் பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழப்பு - மருத்துவ கண்காணிப்பில் 200 பேர்!
அடுத்த செய்தி
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

தொடர்புடைய செய்திகள்