Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி!

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி!

பாதுகாப்பு கருதி, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்

பகிரவும் WhatsApp Facebook

நீர் வரத்து சீரானதால் 9 நாட்களுக்குப் பிறகு தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வட்டக்கானல், பாம்பார்புரம் ஆகிய இடங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக சுற்றுலாத் தலமான கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்தது.

இதனால் பாதுகாப்பு கருதி, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்து, அருவியில் நீர்வரத்து சீராகியதால் தடை நீக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக தேவதானப்பட்டி வனச்சரகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
சீன உற்பத்தித் துறையில் கடும் சரிவு
அடுத்த செய்தி
தீபாவளி பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டம்!

தொடர்புடைய செய்திகள்