Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சீன ஏஐ சந்தையில் தடம் பதிக்கும் இந்திய நிறுவனங்கள்

சீன ஏஐ சந்தையில் தடம் பதிக்கும் இந்திய நிறுவனங்கள்

நிறுவனங்களின் வழக்கமான தகவல் தொழில்நுட்பப் பணிகளைத் தானியக்கமாக மேற்கொள்ள இவை உதவும்.

பகிரவும் WhatsApp Facebook

சீனாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்குப் புதிய வர்த்தக கதவுகளைத் திறந்துள்ளது. சீனத் தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் சேவைத் திறனை இணைத்து, குறைந்த செலவில் வாடிக்கையாளர்களுக்குத் தீர்வுகளை வழங்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

ஜோஹோ குழுமத்தின் மேனேஜ் என்ஜின் நிறுவனம் சீனாவில் தனது முதலீட்டை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 42.5 கோடி யுவானை முதலீடு செய்ய உள்ளது. தரவு மையங்கள், ஏஐ ஆராய்ச்சி, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.


சீனாவில் சுமார் 20 ஆண்டுகளாக இயங்கும் இந்த நிறுவனம், 5,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குச் சேவை வழங்கியுள்ளது. தற்போது அங்குள்ள வாடிக்கையாளர்களுக்காக ‘ஜியா’ ஏஐ உதவியாளர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக 30-க்கும் மேற்பட்ட ஏஐ உதவியாளர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் 100-க்கும் அதிகமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. நிறுவனங்களின் வழக்கமான தகவல் தொழில்நுட்பப் பணிகளைத் தானியக்கமாக மேற்கொள்ள இவை உதவும்.


இந்திய நிறுவனங்களின் கவனத்தை ஈர்ப்பதில் செலவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. டீப் சீக், கிமி போன்ற சீன ஏஐ மாதிரிகளைப் பயன்படுத்தி, தங்களது வாடிக்கையாளர்களுக்கு தேவையான செயலிகளை உருவாக்கும் முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.


சீனாவிடம் வலுவான தொழில்நுட்பக் கட்டமைப்பும், பெரிய சந்தையும் உள்ளன. இந்தியாவிடம் திறமையான மென்பொருள் நிபுணர்களும், சர்வதேச நிறுவனங்களுக்குச் சேவை வழங்கிய அனுபவமும் உள்ளது.


இந்த இரு பலங்களையும் இணைப்பது புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஏஐ மாதிரிகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மாற்றி, அவர்களது தொழில்நுட்ப அமைப்புகளில் செயல்படுத்துவதில் இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில்க் ரூட் நிறுவனம் முயற்சி

சில்க் ரூட் நிறுவனம், இணையவழி வர்த்தகம் மற்றும் பொருட்கள் விநியோகத்தில் சீனாவின் ஏஐ உதவியைப் பெற முயல்கிறது. இதற்காக அலிபாபாவின் ‘Accio Work’ தளத்துடன் தொடர்புகொண்டுள்ளது. எனினும், இந்த முயற்சி இன்னும் பேச்சுவார்த்தை நிலையில்தான் உள்ளது.
ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வாலின் க்ருத்ரிம், சீனாவின் டீப்சீக் ஏஐ மாதிரிகளை இந்திய சர்வர்களில் இயக்குகிறது.

 ஏஸ்கிளவுட் நிறுவனமும் இதே தொழில்நுட்பத்தைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. சீனத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் இயக்கி, இங்குள்ள நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதே இவற்றின் அணுகுமுறை.


மறுபுறம், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் சீனாவில் ஏற்கெனவே அலுவலகங்களுடன் செயல்படுகின்றன. மென்பொருள், ஆலோசனை, வணிகச் சேவைகளை வழங்குகின்றன. இவை புதிய ஏஐ முதலீடுகள் அல்ல என்றாலும், சீனச் சந்தையில் இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாகத் தடம் பதித்திருப்பதைக் காட்டுகின்றன.

முந்தைய செய்தி
நாளுக்குநாள் நலிவடையும் சுங்குடி சேலை உற்பத்தி! நெசவாளர்கள் வேதனை
அடுத்த செய்தி
காப்பீட்டு துறை சீர்திருத்த அமலாக்கம்: IRDAI தலைவர் கருத்து

தொடர்புடைய செய்திகள்