Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கிரெடிட் கார்டு கடன் நிலுவைகள் அதிகரிப்பு

கிரெடிட் கார்டு கடன் நிலுவைகள் அதிகரிப்பு

கிரெடிட் கார்டு நிலுவைகளின் பங்கு 35.2 சதவீதமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

சீனாவில் பொருளாதார மந்தநிலையால், நடுத்தர வயதினரிடையே கிரெடிட் கார்டு கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவது அதிகரித்துள்ளது. நிலையான அரசுப் பணிகளில் இருப்பவர்களும் இதில் அடங்குவர்.

சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு காரணமாகப் பாதிக்கப்படுவோர், வீட்டுக்கடன் தவணைக்கும் குடும்பச் செலவுகளுக்கும் முன்னுரிமை அளிப்பதால், கிரெடிட் கார்டு நிலுவைகள் அதிகரிக்கின்றன.


2026 மூன்றாவது காலாண்டில், அதிகாரப்பூர்வ கடன் வர்த்தகத் தளத்தில் புதிதாகப் பதிவான வாராக்கடன் தொகுப்புகளின் மதிப்பு சுமார் 50 சதவீதம் உயர்ந்து, 14,810 கோடி யுவானை எட்டியது. இதில் கிரெடிட் கார்டு நிலுவைகளின் பங்கு 35.2 சதவீதமாகும்.
தவணை தவறியவர்களில் பெரும்பாலானோரின் சராசரி வயது 40 முதல் 50 வரை உள்ளது.


முன்பு தளர்வான பரிசீலனையுடன் கடன் அட்டைகளை வழங்கிய வங்கிகள், தற்போது புதிய அட்டை வழங்குவதைக் கடுமையாக்கி வருகின்றன. வாராக்கடன்களையும் வசூலிக்க முயல்கின்றன.
வருமானம் மற்றும் வேலைவாய்ப்பில் நிச்சயமின்மை நீடிப்பதால், இந்நிலை தொடரக்கூடும் என வங்கித்துறை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

முந்தைய செய்தி
அரிய கனிம வளம் - துருக்கியின் கனவுக்கு சீன ஆய்வு சவால்
அடுத்த செய்தி
நியூமெக்சிகோவில் தொடரும் வெள்ளம் - அபாயம் நீடிக்கும்!

தொடர்புடைய செய்திகள்